உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் ஊர் - மரபு - தொண்டு - காலம் 223 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41 42. சிறப்புலி நாயனார் - பிராமணர் - திருஆக்கூர் (சோ - பஞ்சாட்சரம் செபித்தவர்; யாகம் செய்தவர் - கி.பி. 660-840. சிறுத்தொண்டர் - (மாமாத்தியர் - திருவெண்காடு (சோ - பல்லவர் சேனைத் தலைவர் அடியார் உபசரணையில் சிறந்தவர்; பிள்ளைக்கறி சமைத்துப் பைரவர்க்குப் படைத்தவர் வாதாபியை வென்றவர்; சம்பந்தர் காலத்தவர் - கி.பி. 600-660. சுந்தரமூர்த்தியார் - ஆதிசைவர் - திருநாவலூர் ந - கோவிலில் மணம் செய்தவர் இரு பெண்களை மணந்தவர் தலங்கள்தோறும் சென்று பாடியவர் - கி.பி. 840-865. செருத்துணையார் - வேளாளர் - ஆவூர் (சோ - கழற்சிங்க நாயனார் மனைவியின் மூக்கறிந்தவர் - கி.பி. 840-865. சேரமான் பெருமாள்-அரசர்-கொடுங்கோளுர் (சோ-பல தலங்களைத் தரிசித்தவர் சுந்தரரோடு கயிலை சென்றவர் பாணபத்திரற்குப் பொன் தந்தவர் (1 பொன் வண்ணத்து அந்தாதி (2 மும்மணிக் கோவை (3) திருக்கயிலாய ஞானவுலாப் பாடினவர் - கி.பி. 840-865. சோமாசி மாறர்-பிராமணர்-திருவம்பர் (சோ - சாதி பேதம் காணாதவர் வேத விதிப்படி யாகம் செய்தவர். சுந்தரரைப் பூசித்தவர் - கி.பி. 840-865 தண்டியடிகள் - மரபு கூறப்படவில்லை - திருவாரூர் (சோ - குளம் வெட்டல் முதலிய தொண்டுகள் செய்தவர் சமணரோடு வாதிட்டுக் கண் பெற்றவர் சமணரைத் திருவாரூரில் இருந்து விரட்டினார், சமணப் பாழிகளை அழித்துக் குளம் கட்டினார். நமிநந்தி அடிகள் காலத்தவர் அரசர் முன் சமணர் வாது கூறினர் - கி.பி. 400-600, திருக்குறிப்புத் தொண்டர் - வண்ணார்-காஞ்சீபுரம் (தொ - சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்; மழையால் அடியாரது ஆடை காய முடியாததால் பாறையில் தம் தலையை மோதிட சிவனார் தடுத்து ஆசீர்வதித்தார் - கி.பி. 660-840. திருஞான சம்பந்தர் - பிராமணர் - சீர்காழி (சோ - சமணரை வென்றவர்; பாண்டியனைச் சைவனாக்கினவர் தோற்ற சமணர் கழுவேறினர் - கி.பி. 600-660. திருநாவுக்கரசர்-வேளாளர் - திருவாமூர் (தொ - தொண்டை நாட்டைத் தூய்மைப் படுத்தியவர். பல்லவனைச் சைவராக்கினவர்- கிபி 600-660. திருநாளைப்போவார்-பறையர்-ஆதனுர் (சோ-தோல், வார் முதலியன கோவிலுக்கு உதவியவர். பல தலங்களைத் தரிசித்தவர்; சிதம்பர தரிசனம் கண்டவர் எரி மூழ்கிப் புகழ் உடம்பு பெற்றவர்-கி.பி. 660-840.