உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பெரியபுராண ஆராய்ச்சி 10. ஆளுடைய நம்பி றுநீபுராணம் (1166–1182) சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலம் கி.பி. 1133 - 150; அவன் மகன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 149-1173); அவனுக்குப் பின் பட்டம் பெற்றவன் இராசாதிராசன் (கி.பி. 166-182. இந்த இராசாதிராசனது 9ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 174இல் திருவொற்றியூர்க் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கீழ்வரும் செய்தியைக் குறிக்கிறது. "மடத்துத் தலைவரான சதுரானன பண்டிதர், காபாலிகரது சோம சித்தாந்தத்தை விரித்த வாகீசுவர பண்டிதர், இவர்கட்கு முன் திருப்பங்குனி உத்தரத்து ஆறாந் திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயில்யத்தன்று படம் பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி பூரீ புராணம் கேட்டருளா நிற்க". : இங்குக் குறித்த நூல் யாது? சேக்கிழார் தாம் பாடிய நூலை மாக்கதை' என்றனர். இதனால், அது 'கொங்குவேள் மாக்கதை' போன்றதொரு ஒருவரைப் பற்றிய காவியம் என்பது நன்கு புலப்படும். சேக்கிழார் தமது நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரை இட்டுள்ளார். திருத்தொண்டர் என்ற பெயர் இங்குச் சுந்தரரையே குறிப்பதாகும் என்பது சேக்கிழார் கருத்து என்பது. "சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி" என்பதனால் நன்கறியலாம். இது பற்றியே சேக்கிழார் தமது நூலைப் பெருங்காவிய இலக்கணம் பொருந்த நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு முதலியவை அமைத்தும் சுந்தரர் வரலாற்றை ஒரே தொடர்பாகக் கூறாது நூலின் முதல் - இடை - கடை ஆகிய முப்பகுதிகளில் வைத்தும், சுந்தரராற் குறிக்கப்பட்ட நாயன்மார் வரலாறுகளை இடையிடையே வைத்தும் மங்கலமாக முடித்துள்ளார். இதனால் சுந்தரர் புராணமே 'திருத்தொண்டர் புராணம் என்பது அறியத் தகும். திருநாவுக்கரசர் ஆளுடைய அரசு என்றும், திருஞான சம்பந்தர் 'ஆளுடைய பிள்ளையார் என்றும் வழங்கப் பெற்றவாறே சுந்தரர் ஆளுடைய நம்பி என்று வழங்கப் பெற்றார். அப் பெயர் கொண்டு 'ஆளுடைய நம்பி ரீ புராணம் என்ற வழக்கு இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் ஏற்பட்டிருந்தது போலும் ஆளுடைய நம்பி - சைவ முதல் திருத் தொண்டர் (சுந்தரர் பூரீ - திரு ஆளுடைய நம்பி ரீ புராணம் என்பது திருத்தொண்டர் திருப்புராணம்' ஆகும். இவ்வழக்குத் திருமுருகன் திருமடம்" என்றாற் போன்றது. ஆகவே, சேக்கிழார் தந்த திருத் தொண்டர் புராணம் என்ற நூலே அவர் காலத்துக்குப் பிறகு கல்வெட்டுகளில் 'ஆளுடைய நம்பி ரீ புராணம்' எனப் பொறிக்கப்பட்டது. நாட்டில் வழக்குப் பெற்றது என்று கருதலாம். மேற் கூறிய கல்வெட்டுக் காலம் சேக்கிழாருக்கு ஏறத்தாழ 20-25 ஆண்டுகட்குப்பிற்பட்டதே