பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலம் 39 சுந்தரர் கூறுவன 1. கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” - 2. "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாம் அன்றே.” இவற்றால் அறியப்படுவன 1. கழற்சிங்கன் பேரரசன். 2. அவன் கழற்சிங்கன் என்றதால் சிறந்த போர் வீரன். 3. சிறந்த சிவபக்தன் 4. அவனுக்குத் திறை கட்டா அடங்காத மன்னர் (போரில்-சிவனருளால் தண்டிக்கப்பட்டனர். இராச சிங்கன் (கி.பி. 685-720) இனி இக்குறிப்புகள் இராச சிங்கனைப் பற்றிய குறிப்புகளோடு ஒன்றுபடுகின்றனவா என்பதைக் காண்போம். 1. இவன் பேரரசன் என்பது சீனத்துடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பினால் நன்கு விளங்குகிறது.' - 2. இவன் 'நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன் போரில் சிங்கம் போன்றவன் போரில் மிகக் கொடியவன் தன் பகைவரை அழிப்பவன் பகைவர்க்கு இடியேறு போன்றவன் கொடிய பேரரசுகளை ஒழிப்பவன் பல இடங்களை வென்றவன்: போரில் மனவுறுதி உடையவன் போரில் களைப்படையாதவன், செருக்கரை அடக்குபவன்...' என்று இவன் கட்டிய கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுக்கள் இவனைப் பாராட்டியுள்ளன. ஆதலின், இவன் சிறந்த போர் வீரன் என்பது தெற்றெனத் தெரிகிறது. இவன் சாளுக்கிய விநயாதித்தனையும் கங்க அரசனான முதலாம் சிவமாறனையும் தாக்கிப் போரிட்டான் என்று கருதப்படுகிறது" 3. இவன். 'ரிஷபாஞ்சனன், பூரீ சங்கர பக்தன். சிவ சூடாமணி என்று கல்வெட்டுக்களிற் புகழப்படுபவன்; உலகப் புகழ்பெற்ற காஞ்சிக் கயிலாசநாதர் கோவில் கட்டியவன் சைவசித்தாந்தத்திற் பேரறிவுடையவன் கலியுகத்தில் வான்ஒலி அசரீரி கேட்ட பேறுடையவன்." இக் குறிப்புகளால் இவன் சிறந்த சிவபக்தன் என்று துணிந்து கூறலாம்.