பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பெரிய புராண விளக்கம்

வனாகி,'ஐயனே, தேவரீருடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை விட்டுப் பிரியும் சிறிய தன்மை யைப் பெற்ற அடியேன் காம மயக்கத்தை அடையும் மனித னாகப் பிறந்து மயங்குகின்ற காலத்தில் அடியேனைத் தேவரீர் தடுத்து ஆட்கொண்டருளிச் செய்வீராக’ என்று - திருவாய் மலர்த்தருளிச் செய்ய. பாடல் வருமாறு: கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான், செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐயனே, தடுத் தாண்டருள் செய்’ என..' இந்தப்பாடலும் குளகம். கைகள்-ஆலாலசுந்தரன் தன் னுடைய கைகளை. அஞ்சலி-அஞ்சலியாக கூப்பி- குவித் துக் கைலாசபதியைக் கும்பிட்டு. க், சந்தி. கலங்கினான்மனக்கலக்கத்தை அடைந்தவனாகி; முற்றெச்சம், ஐயனேஅடியேனுடைய தந்தையைப் போன்றவனாகிய கைலாச பதியே. செய்ய-செந்தாமரை மலர்களைப்போலச் சிவந்த. சேவடி-செம்மையான திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். நீங்கும்-விட்டுப் பிரியும். சிறுமையேன்-அற்பனா கிய அடியேன். மையல்-காம மயக்கத்தை அடையும். - மானுடமாய்-மனிதனாகி: திணை மயக்கம். வழி-- காலத்தில்.தடுத்து-அடியேனைத் தடுத்து. ஆண்டருள் செப் -ஆண்டருளிச் செய்வீராக. என-என்று ஆலால சுந்தரன் வேண்டிக் கொள்ள, இடைக்குறை.

தந்தையைப் போன்றவன்: "ஐயன் நொய்யன்.", புளமங்கை அத்தன். ’, ‘எந்தாய் என இருத்தான். , எந்தை என்றங் கிமையோர்.’’, வெண்ணிற் றப்பர்.’’, ஐயர் சோற்றுத்துறை', 'எந்தை உறைகின்ற இடை மரு தீதோ. 'தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே.”, சமாற்பேற்றிருக்கின்ற ஐயா.’’, 'பல்லவ ணிச்சரத்தெம் அத்தன்.”, எத்தையார் வளநகர் இலம்பையங் கோட்டுர்.’, கொன்றைகமழ் புன்சடை வைத்த எந்தை. அந்தன் அறவன்றன்னடி', 'அத்தன் ஆளுரை. ஐயன் அணி