பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பெரியபுராண விளக்கம்

பக்தியின் வசப்பட்டவர்கள் ஆகிப்-பரமேசுவரனுக்கு ஆட்கள் ஆக விளங்கும் அன்பர்கள் தங்கள் தங்களுக்குள்ளே சூடிக் கலந்தவர்கள் ஒருவரை ஒருவர் தலையினால் வணங்கு மாறு போல மிகுதியாக உள்ள வரிசைகளில் முதிர்ச்சியைப் பெற்ற தங்களுடைய தலைகளைச் சாய்த்து வளைந்து அந்த வித்தகர்களாகிய பக்தர்களுடைய இயல்பைப் போல சாலி யென்னும் சிறப்பான நெற்பயிர்கள் யாவும் விளைந்து முதிர்ச்சியைப் பெற்று விள்ங்கின்.” , , ; •

பாடல் வருமாறு:

'பத்தியின் பாலராகிப் பரமனுக் காளாம் அன்பர்

தத்தமிற் கூடினார்கள்.தலையினால் வணங்கு மாபோல் மொய்த்தள்ே பக்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை

வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம்.’’

பத்தியின் பாலர் ஆகி.பக்தியின் வசப்பட்டவ்ர்கள் ஆகி: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பரமனுக்கு-பரமேசுவர லுடைய உருபு மயக்கம். ஆள்-ஆட்கள்: அடிமைகள்: ஒருமை பன்மை மயக்கம். ஆம் ஆகி விளங்கும். அன்பர்பக்தர்கள்: ஒரும்ை பன்மை மயக்கம். தத்தமில்-தங்கள் தங்க ளுக்குள். சூடினார்கள்-சூடிக் கலந்தவர்களாகி முற்றெச்சம். தலையினால்-தங்களுடைய தலைகளினால்: ஒருமை பன்மை மயக்கம், வணங்குமா போல்-ஒருவரை ஒருவர் பணியு மாறு போல. மொய்த்த-மிகுதியாக உள்ள. நீள்-நீளமாக உள்ள. பத்தியின்-பயிர்களின் வரிசையில். பால் முதிர்பால் முதிர்ச்சியைப் பெற்ற தலை-தங்களுடைய தல்ை கிள்ை; ஒரும்ை பன்ம்ை மயக்கம். வணங்கி-வளைந்து. மற்றை: அசை நிலை. வித்தகர்-அந்த வித்தகர்களாகிய பக்தர்களுடைய வித்தகர்-கலையில் வல்லவர். தன்மை போல இயல்பைப்போல். சாலி-சாலி என்னும் சிறந்த நெற் பயிர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-யாவும். விளைந்தன:விளைந்து. முதிர்ச்சியைப் பெற்று விளங்கின.