பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்ாட்டுச் சிறப்பு - 185.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் திருநாவுக்கிரசு நாயனாரும் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் வணங்கியதைக் காண்க. இந்தச் செய்தியைப் புலப்படுத்தும் இடம் பெரிய புராணத்தில் உள்ளது. அது வருமாறு: - -

- 'திருநாவுக் கரசரெதிர் சென்றிறைஞ்சச்

- சிரபுரத்துத் தெய்வ வாய்மைப் பெருஞான சம்பந்தப் பிள்ளையார்

எதிர்வணங்கி அப்ப ரேநீர் - வருநாளில் திருவாரூர் நிகழ்பெருமை வகுத்துரைப்பீர் என்று கூற அருநாமத் தஞ்செழுத்தும் பயில்வாய்மை அவரும்எதிர் அருளிச் செய்வார்.' பின்பு உள்ள 23-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'அரிந்த சம்பா நெற்களினுடைய கதிர்களை அடுக்கி: வைத்து அடுக்கலாக உழவர்கள் சேர்த்து வைப்பார்கள்; ஆவல் உண்டாகியதனால் குளத்திலிருந்து வலை போட்டுப் பிடித்துக்கொண்டு வந்து வெட்டிய பல மீன்களைக் குவித்த, உயரமான மலையைப்போல அமைப்பார்கள்; வளைந்த, மூக்குக்களைப் பெற்ற சங்குப் பூச்சிகள் உமிழ்ந்த முத்துக் &63));T ஒளி விசும் பெரிய மலையைப் போல உயரமாகக் குவிப்பார்கள்; மலர்ந்த பல மலர்களினுடைய தொகுதியி' லிருந்து தேனைச் சொரிந்து இறங்கும் மலையை வைப்பார்: கள். பாட்ல் வருமாறு: -

'அரிதரு செக்நெற் குட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்;.

பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடும் குன்று செய்வார்; சுரிவளை சொரிந்த முத்தின் சுடப்பெரும் பொருப்பு

யாபபாா: விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.

அரிதரு-அறுத்துக்கொண்டு வந்த செந்நெல்-சம்பா நெற்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். சூட்டின்