பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T86 பெரிய புராண விளக்கம்

கதிர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். அடுக்கியஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்த. அடுக்கல்-அடுக்கலை. சேர்ப்பார்-உழவர்கள் சேர்த்து வைப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பரிவு-ஆவல். உற-உண்டாகியதால். த்:சந்தி. தடிந்த-குளத்திலிருந்து வலைபோட்டுப் பிடித்துக் கொண்டு வந்து வெட்டிய. பல்-பல வகையான. இவை கயல் மீன்கள், வாளை மீன்கள், வரால் மீன்கள்; சுறாமீன் கள் முதலியவை. மீன்-மீன்களை ஒருமை பன்மை மயக்கம். படர்-குவித்து வைத்த நெடும்-உயரமாக உள்ள குன்றுமலையைப்போல. செய்வார் அந்த உழவர்கள் குவிப்பார் கள்; ஒருமை பன்மை மயக்கம். சுரி-சுழித்த மூக்குகளைப் பெற்ற வளை-சங்குப்பூச்சிகள்; ஒருமை பன்மை மயக்கம். சொரிந்த-உமிழ்ந்த முத்தின்-முத்துக்களால்; ஒருமை பன்மை மயக்கம். சுடர்-ஒளியை வீசும். ப்:சந்தி பெரும்" பெரிய. பொருப்பு-மலையைப் போல. உயர்ப்பார்-உயர .மாகக் குவித்து வைப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். விரி-மலர்ந்த மலர்-பல வகையான மலர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கற்றை-தொகுதி. வேரிதேனை. பொழிந்து-சொரிந்து. இழி-இறங்கி வழியும். வெற்பு-மலர்களை மலையைப் போல. வைப்பார்-அடுக்கி வைப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். -

பிறகு உள்ள 24-ஆம் பாடலின் கருத்து வருமாறு: * உழவர்கள் அறுத்த சாலி நெற்களின் தொகுதியை அடுக்கி வைத்த விசாலமான மலையைப் போன்ற குவியலி னுடைய உச்சியைக் கீழே தள்ளிவிட்டுப் பெரிய கால்களைக் கொண்ட காளை மாடுகளைக் கட்டி ஒட்டும் கரிய பெரிய வண்டிகளினுடைய கூட்டம், முழங்கிய மேகங்கள் சேர்ந்த ஆட்டம் ஏறுவதற்கு அருமையாக உள்ள மலையினுடைய சிகரத்தின் சாரலின்மீது வலமாக வந்து சுற்றியிருக்கும் காட்சியினால் மருத நிலம் மிக்க சிறப்பைப் பெற்றதாக விளங்கியது. பாடல் வருமாறு: