பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 187

'சாலியின் கற்றை துற்ற - தடவரை முகடு சாய்த்துக்

காலிரும் பகடு போக்கும்

கரும்பெரும் பாண்டில் ஈட்டம் ஆலிய முகிலின் கூட்டம்

அருவரைச் சிமயச் சாரல் மேல்வலம் கொண்டு சூழும்

காட்சியின் மிக்க தன்றே.' சாலியின்-உழவர்கள் அறுத்த சிறந்தனவாகிய சாலி நெற்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். கற்றை-தொகு தியை துற்ற-முட்டைகளாகக் கட்டி அடுக்கி வைத்த் தட விசாலமான வரைமலையைப் போன்ற குவியலினுடைய, உவம ஆகுபெயர். முகடு-உச்சியை. சாய்த்து-தரையில் தள்ளிவிட்டு. க்: சந்தி கால் இரும்-கருமையான கால்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம், பகடுகாளை மாடு களைக் க்ட்டி, ஒருமை பன்மை மயக்கம். போக்கும்-ஒடச் செய்யும். கரும்-கருமையான. பெரும்.பெரிய பாண்டில்வண்டிகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். ஈட்டம்கூட்டம். ஆவிய-ஆகாயத்தில் முழங்கிய முகிலின்-மேகங்களி ணுடைய ஒருமை பன்மை மயக்கம். கூட்டம்-தொகுதி.அரு. ஏறுவதற்கு அருமையாக உள்ள வரை-மலையினுடைய ச்: சந்தி.சிமய-சிகரத்தின் ச்:சந்தி சாரல்மேல்-பக்கத்தின்மீது. வலம் கொண்டு-வலமாக வந்து , சூழும்-சுற்றியிருக்கும். காட்சியின்-தோற்றத்தைப் போல மிக்கது.மருத நிலம் மிக்க சிறப்பைப் பெற்றதாக விளங்கியது. அன்று, ஏ: இரண்டும் ஈற்றசை நிலைகள்.

அடுத்து வரும் 25-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: வைக்கோலை ஆராய்ந்து போக்கிவிட்டு வண்டிகளில் வந்த முட்டைகளை அவிழ்த்து அவற்றில் வைத்துக் கட்டி யிருந்த நெற்கள் யாவற்றையும்ஆறப்போட்டு வைத்துப்பிறகு அவற்றை முறங்களில் எடுத்து மழை பெய்வதைப்போலத்