பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பெரிய புராண விளக்கம்

துாற்றிச் சிவந்த தங்கமலையும், கோமேதகம், நீலக்கல், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புருடராகம், வைடுரி யம், வயிரம் என்ற நவரத்தின மலையும் இவை ஆகும் என்று கூறும் வண்ணம் கைத்தொழிலில் வல்லமையைப் பெற்றவர்க ளாகிய உழவர்கள் ஆகாயம் மறையுமாறு அடுக்கி வைத்த நெல் மூட்டைகளினுடைய மலையினால் வளம் சேர்ந்த மலையை உடைய குறிஞ்சி நிலத்தைப் போலத் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும் நீர் நிலைகளைப் பெற்ற மருத

நிலம் விளங்கும். பாடல் வருமாறு:

"வைதெரிக் தகற்றி ஆற்றி மழைபெயல் மானத் தூற்றிச்

செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக் கைவினை மள்ளர் வானம் கரக்கவாக் கியநெற் குன்றால் மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.' வை-வைக்கோலை தெரிந்து-ஆராய்ந்து. அகற்றிபோக்கிவிட்டு. ஆற்றி-வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்த முட்டைகளை அவிழ்த்து அவற்றில் பொதிந்து கட்டியிருந்த நெற்கள் எல்லாவற்றையும் வெயிலில்ஆறப்போட்டு வைத்து. மழை-பிறகு அந்த நெற்களை முறங்களில் வாரி எடுத்து மழை, பெயல்-பெய்வதை மான-போல. த்:சந்தி. துாற்றிகாற்றில் தூற்றி. ச்:சந்தி. செய்ய-சிவந்த பொற்குன்றும்தங்க மலையும். வேறு-வேறாக விளங்கும். நவமணி. கோமேதகம், நீலக்கல், பவளம், மரகதக்கல், மாணிக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வயிரம் ஆகிய நவரத்தினங் களின். மணி:ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. சிலம்பும்மலையும் இவை ஆகும். என்ன-என்று கூறும் வண்ணம். க்:சந்தி. கைவினை-கைத்தொழிலில் தேர்ச்சியைப் பெற்ற. மள்ளர்-உழவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வானம்ஆகாயம். கரக்க-மறையுமாறு, ஆக்கிய-அடுக்கி வைத்த" நெல்-நெல் மூட்டைகளினுடைய; ஆகுபெயர்; ஒருமை பன்மை மயக்கம். குன்றால்-மலையினால், மொய்-வளம் சேர்ந்த. வரை-மலையைப் பெற்ற. உலகம்-குறிஞ்சி