பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு . 81

முகன்-நான்கு முகங்களைப் பெற்ற பிரமதேவன்; முகன்: ஒருமை பன்மை மயக்கம். மால்-திருமால். புரந்தரன்இந்திரன். முதலாம்-முதலியவர்களாகும்; விண்ணவர்தேவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எண்-கணக்கு. இலார்-இல்லாதவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். இலார்: இடைக் குறை. மற்றும்-வேறாக உள்ளவர் களும்; திணை மயக்கம். காதலால்-கைலாச பதியைத் தரிசித்து வணங்கும் விருப்பத்தோடு: உருபு மயக்கம். மிடைந்த - நெருக்கமாகக் கூடியுள்ளதாகிய, முதல் - முதலில் உள்ள பெரும் - பெருமையைப் பெற்றி ருக்கும். தடையாம் - வாசலாகும். கதிர் - ஒளியை விசும். மணி - மாணிக்கங்களைப் பதித்த: ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி, கோபுரத்து-கோபுர வாசலில். உள்ளார் . இருப்பவர். பூத- பூதங்களும்: ஒருமை பன்மை:மயக்கம். வேதாள - வேதாளங்களும்; ஒருமை பன்மை மயக்கம். பெரும்-பெருமையை அடைந் திருக்கும். கண - சிவகணங்களின்; ஒருமை பன்மை மயக்கம். நாதர் தலைவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். போற்றிட-வாழ்த்தி வணங்கும் வண்ணம். ப்; சந்தி. பொதுவில் - நடன சபையில், நின்று - நின்று கொண்டு. ஆடும் - திருநடனம் புரிந்தருளும், ஆதி - எல்லாத் தேவர்களுக்கும் முதல்வராகிய; திணை மயக்கம். தேவனார் - தேவராகிய கைலாச பதியார். கோயில்-எழுந்தருளியிருக்கும் ஆலயத்துக்கு. நாயகன் - தலைவனாக விளங்குபவன். நந்தி-திருநந்திதேவனாகிய, எம்பெருமான் - அடியேங்களுடைய தலைவன்: இது சேக்கிழார் தம்மைக் கூறிக்கொண்டது,

கனதாகர் குதி இருத்தல்: "பூத்மும் கணமும் சூழ, ! என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளி யதைக் காண்க.

ஆதி தேவனார்: "ஆதி பகவன்' என்று திருவள்ளு வரும். தேவர்கள் தேவர்' 'தேவர் தேவர் திரி

பெ-6