பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - பெரிய புராண விளக்கம்

மூர்த்தி நாயனாரும், 'பெருந்தாழ் சடைமுடி .”. *பின்னுவார் சடையான் .'", "ஆற்ற நீள் சடை.", "சடை நீள்முடிச் சங்கரன், என்று திருநாவுக்கரசு நாயனாரும், கங்கைவார் சட்ை யாய்.,' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பின்பு உள்ள 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு : "தங்களுடைய கைகளில் மானையும் மழுவையும் ஏந்தியவர்கள்: கங்கையாறு உலாவும் சடாபாரத்தில் ஒளியை வீசும் இளைய பிறைச் சந்திரனாகிய நறுமணம் கமழும் கண்ணியைப் பெற்றவரும் அழகை உடைய வரும் ஆகிய கைலாசபதியார் அமர்ந்திருக்கும் இயல் பாலும், அளத்தற்கு அருமையாக உள்ள பெருமை யாலும் தங்களுடைய திருமேனிகளில் தழைத்து ஓங்கி யிருக்கும் பரிசுத்தத்தாலும், வெற்றியையும் வெண் கொற்றக் குடையையும் பெற்றவனாகிய அநபாயச் சோழ மாமன்னனாகிய செங்கோலைப் பிடித்த அபயனு டைய அழகிய திருவுள்ளத்தில் ஓங்கி விளங்கும் அழகிய கயிலாயமாகிய உயரமான மலை. பாடல் வருமாறு :

“கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்

கதிரிளம் பிறைாறும் கண்ணி ஐயர்விற் றிருக்கும் தன்மையி னாலும்

அளப்பரும் பெருமையி னாலும் மெய்யொளி தழைக்கும் தூய்மையி னானும்

வென்றிவெண் குடைஅரு பாயன் செய்யகோல் அபயன் திருமணத் தோங்கும்

.திருக்கயி லாயள்ே சிலம்பு. கையில்-தம்முடைய திருக்கரத்தில், மான்-மான் குட்டியையும், மழுவர்.மழுவையும் பெற்றவரும்,கங்கைகங்கையாறு. .சூழ்-உலாவும், சடையில்-தம்முடைய 'தலையில் விளங்கும் சடாபாரத்தில் கதிர்-ஒளியை வீசும், இளம்-இளமையான, பிறை-பிறைச் சந்திர