பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 155.

திருக்கோலக் காஎய்தித் தேவர்.பிரான்

கோயில்வலம் செய்து முன்னின்

றிருக்கோலிட் டறிவரிய திருப்பாதம்

ஏத்துவதற் கெடுத்துக் கொள்வார்.'

பெருக்கு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாள் நீர் வெள்ளம்.ஒலிட்டு-பேராரவாரத்தைச் செய்து கொண்டு, அலை-அலைகள்: ஒருமை பன்மை மயக்கம். பிறங்கும். விளங்கும். காவிரி-காவிரியாற்றில் ஒடும். நீர்-புனல். பிரசம்தேன் நிரம்பிய, மலர்-பலவகையாக உள்ள மலர்களையும்; ஒருமைபன்மை மயக்கம். தரளம்-முத்துக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். சிந்த-தன்னுடைய கரையில் எடுத்து வீச. வரி-கோடுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம்.க்:சந்தி கோல-அழகைக் கொண்ட வண்டு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். ஆட- அலைந்து திரிய. மாதரார்-விருப்பம் மருவிய பெண்மணிகள். குடைந்து-முழுகி, ஆடும்-துளையும் . மணி-பளிங்கைப் போன்ற உவம ஆகுபெயர். நீர்-புனல் நிரம்பியிருக்கும் வாவி-வாவியைப் பெற்ற, வாவி:வாபீ' என்ற வடசொல் லின் திரிபு. த்:சந்தி, திருக்கோலக்கா எய்தி-திருக்கோலக்காவிற்கு அந்த நாயனார் எழுந்தருளி அடைந்து. த்:சநதி, தேவர்-தேவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். பிரான்-தலைவனாகிய சத்தபுரீசன. கோயில்-எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை வலம்செய்துவலமாக வந்து. முன்-அந்தச் சத்தபுரீசருடைய சந்நிதியில். நின்று-நின்றுகொண்டு. இருக்கு-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் ஒருமை பன்மை மயக்கம்.ஒலிட்டு-ஓலமிட்டும் அறிவரிய-தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. திருப்பாதம் அந்தச் சத்தபுரீசருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். ஏத்துவதற்கு-துதிப்பதற்காக. எடுத்துஒரு திருப்பதிகத்தைத் தாம் பாடியருளுவதற்குத் தொடங்கி. க்: சந்தி. கொள்வார்-கொள்வாரானார்.