பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பெரிய புராண விளக்கம்-10

ஆலயத்திற்கு முன்னால் உயரமாக விளங்கும் கோபுரத்திற்கு முன்பு இருக்கும் வாசலுக்குள் எழுந்தருளி அந்தத் திருக் கோயிலை வலமாக வந்து திருக்கோயிலுக்குள் நுழைந்து தேன் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்தவராகிய அந்தச் சாயாவனேசுவரருடைய அழகிய சந்நிதிக்கு எழுந்: தருளி அந்த சசுவரரைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தம்முடைய இடக்கரத்தில் மான் குட்டியை ஏந்தியவராகிய அந்த ஈசுவரரை வாழ்த்துவாராகி 'மண்புகார்' என்று ஒரு திருப் பதிகத்தைத் தொடங்கித் தம்முடைய திருமேனியில் உள்ள மாமிசங்கள் எல்லாம் உருக்கத்தை அடையுமாறு அந்த ஈசுவரரைத் துதித்து விட்டுத் தம்முடைய தலையின் மேல் தம்முடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்து. விளங்கும் திருக்கரங்களை வைத்துக் குவித்துக் கும்பிட். டார். பாடல் வருமாறு:

வானள வுயர்ந்த வாயி

லுள்வலம் கொண்டு புக்குத் தேனலர் கொன்றை யார்தம்

திருமுன்பு சென்று தாழ்ந்து மானிடம் தரித்தார் தம்மைப்

போற்றுவார்.' மண்புகார் என் றுனெலாம் உருக ஏத்தி

உச்சிமேற் குவித்தார் செங்கை." ஆான் அளவு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஆகாயம் வரையிலும். உயர்ந்த-உயரமாக உள்ள. வாயிலுள்-சாயாவனேசுவரருடைய ஆலயத்திற்கு முன்னால் .., விளங்கும் கோபுரத்திற்கு முன் 4 இருக்கும் திருவாசலுக்கு உள்ளே. வலம் கொண்டு-எழுந்தருளி அந்தத் இருக்கேள்விலை வலமாக வந்து. புக்கு-அந்த ஆலயத்துக்குள் துழைந்து. த்:சந்தி. தேன் அலர்-தேன் மலரும். கொன்றை பார்தம்-கொன்றை மலர் மாலையை அணிந்து கொண்டி ருப்பவராகிய அந்தச் சாயாவனேசுவரருடைய. கொன்றை: