பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 197

ஆகுபெயர். தம் : அசைநிலை. திரு.அழகிய. முன்புசந்நிதிக்கு. சென்று-எழுந்தருளி. தாழ்ந்து-அந்த ஈசுவரரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. மான் இடம்-தம்முடைய இ-க் கர்த்தில் மான்குட்டியை. தரித்தார் தம்மை-ஏந்தியவராகிய அந்தச் சாயாவனேசுவரரை. தம் : அசைநிலை. ப்:சந்தி. போற்றுவார்-வாழ்த்துவாராகி; முற்றெச்சம். மண் புகார் என்று. 'மண்புகார்' என ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளத் தொடங்கி. ஊன்-தம்முடைய திருமேனியில் உள்ள மாமி சங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-யாவும்: இடைக் குறை உருக-பக்தியினால் உருக்கத்தை அடையுமாறு: ஏத்தி-அந்த ஈசுவரரைத் துதித்து விட்டு. உச்சிமேல்தம்முடைய தலையின்மேல். செங்கை-செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்து விளங்கும் திருக்கரங்களை வைத்து. கை : ஒருமை பன்மை மயக்கம். குவித்தார்-குவித்துக் கும்பிட்டார். -

இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரம் சீகாமரப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடி யருளியது. அது வருமாறு:

'மண்புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் கண்புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன் தாள் சார்ந்தாரே...'

பிறகு உள்ள 123-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் செய்யுட் களுக்கு உரிய சீர்களோ டு விளங்கிய இறுதிப் பாசுரத்தில் தம்முடைய திருநாமத்தை வைத்த திருக்கடைக்காப்பைப் பாடியருளி அந்தச் சாயாவனேசுவரரை வாழ்த்தி விட்டு, இந்தப் பூமண்டலத்தில் பல்வேறு சிவத்தலங்களில் வாழும் திருத்தொண்டர்கள் தம்மை வாழ்த்தி வணங்குமாறு நடப்