பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பெரிய புராண விளக்கம்-10

பவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிறகும் அழகைப் பெற்றதும், உரிய பன் அமைந்ததும் ஆகிய ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி அந்த ஈசுவரரைத் துதித்து விட்டு மேலே எழுந்தருளி எங்கும் நிறைந்திருப்பவராகிய வேதாரணியேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருவெண்காட்டிற்குத் தம்முடைய திருவுள்ளத்தில் நிரம்பியிருக்கும் உண்மையான விருப்பத்தோடும் அந்த வேதாரணியேசுவரரை வணங்குவதற்காக அந்த நாயனார் வேதாரணியத்தை அடைந்தார். பாடல் வருமாறு:

சீரினில் திகழ்ந்த பாட்டில்

திருக்கடைக் காப்புப் போற்றிப்

பாரினிற் பொலிந்த தொண்டர்

போற்றிடப் பயில்வார் பின்னும்

ஏரிசைப் பதிகம் பாடி 将

ஏத்திப்போங் திறைவர் வெண்கா

டாருமெய்க் காத லோடும்

பணிவதற் கணைந்தார் அன்றே.'

சீரினில்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் செய்யுட்களுக்கு உரிய சீர்களோடு: ஒருமை பன்மை மயக் கம்: உருபு மயக்கம். திகழ்ந்த-விளங்கிய பாட்டில்-இறுதிப் பாசுரத்தில். திருக்கடைக காப்பு:தம்முடைய திருநாமத்தை வைத்த திருக்கடைக் காப்பை, ப், சந்தி. போற்றி-வாழ்த்திப் பாடியருளி. ப்: சந்தி. பாரினில்-இந்தப் பூமண்டலத்தில் பல் வேறு சிவத்தலங்களில். பொலிந்த-விளங்கிவாழும். தொண் டர்-திருத்தொண்டர்கள்: ஒருமை பன்மை மயக்கம். போற். றிடதம்மை வாழ்த்தி வணங்குமாறு. ப்: சந்தி, பயில்வார்ஒழுகுபவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பின் னும்-பிறகும். ஏர்-அழகைப் பெற்றதும்; வினையாலணையும் பெயர். இசை-உரிய பண் அமைந்ததும்; வினையாலணை யும் பெயர் ப்: சந்தி. பதிகம்-ஆகிய ஒரு திருப்பதிகத்தை. பாடி-பாடியருளி. ஏத்தி-ஈசுவரரைத் துதித்துவிட்டுப்:சந்தி. போந்து-அப்பால் எழுந்தருளி. இறைவர்-எங்கும் நிறைந்: