பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பெரிய புராண விளக்கம்-1ே

செய்த வத்திரு முனிவரும் தேவரும்

திசையெலாம் நெருங்கப்புக் கையர் சேவடி பணியும்அப் பொருப்பினில்

ஆதர வுடன்சென்றார்.'

மொய்கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ் முது: குன்றை அடைவோம்' என்று மொய்கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம்" என. எய்து-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மிடம் அடைந்த சொல்-சொற்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். மலர்-மலர்களைக் கட்டிய ஒருமை பன்மை: மயக்கம். மாலை வண்பதிகத்தை-மாலையாகிய சொற்சுவை பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற ஒரு திருப்பதி கத்தை. இசையொடும்-நட்டபாடைப் பண்ணோடும். புனைந்து-அணிந்து. ஏத்தி-பழமலை நாதரைத் துதித்து. து:சந்தி, செய்-புரிகின்ற. தவ-தவத்தைப் பெற்ற த்சந்தி. திரு-அழகிய, முனிவரும்-முனிவர்களும்; ஒருமை பன்மை: மயக்கம். தேவரும்-தேவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். திசைஎலாம்-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகள் எல்லாவற்றிலும். திசை ஒருமை பன்மை மயக்கம். எலாம்: இடைக்குறை. நெருங்க-நெருக்கமாக நின்று கொண்டு. ப்:சந்தி. புக்கு-விருத்தாசலேசுவரருடைய திருக்கோயிலுக்குள் நுழைந்து. ஐயர் - ஐ ய ரா கி. ய விருத்தாசலேசுவரருடைய. ஐயர்-தலைவர்; தந்தையைப் போன்றவர்; அழகைப் பெற்றவர். சேவடி-செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை அடி: ஒருமை பன்மை மயக்கம், பணியும்-வணங்கும். அப்பொருப்பினில்அந்தப் பழமலைக்கு உருபு மயக்கம். ஆதரவுடன்-பக்தி யோடு, பேரார்வத்தோடு எனலும் ஆம். சென்றார்-அந்த நாயனார் எழுந்தருளினார். - >

அந்த நாயனார் திருமுதுகுன்றத்தைப் பற்றிப் பழந், தக்கராகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: