பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 318 பெரிய புராண விளக்கம்.10

அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்கள்: ஒருமை பனமை மயக்கம். அனைத்தும்-யாவும். ஒரு வடிவு ஆம்ஒரு வடிவமாக வந்தனவாகும். என-என்று கூறுமாறும்: இடைக்குறை. நிறை-கலைகள் நிரம்பிய கலைகள்: தோன்றா எழுவாய், மதி-பூரண சந்திரனாகிய, ப்: சந்தி. பிள்ளை-ஆண் குழந்தை, நீள்-பரவலாக உள்ள. நிலம்

தரையை, உலகத்தை' எனலும் ஆம். சேர்ந்தென. சேர்ந்திருக்கிறது என்று கூறுமாறும். த் : சந்தி. துறைதுறையில். அலை-அலைகள் வீசும்; ஒருமை பன்மை

மயக்கம். க், சந்தி. கங்கை-க ங் ைகயா ற் றை. சூடும். தம்முடைய தலையின்மேல் தங்க வைத்திருக்கும். அரத்துறை-திருநெல்வாயில் அரத்துறையில். இறைவரைதிருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எங்கும் திறைந்தவருமாகிய அரத்துறை நாதரை. தி: சந்தி. .ெ த ா ழு வா ன் - வணங்கும் பொருட்டு. விரைந்து --வேகத்தோடு. ஏகினார்-அந்த நாயனார் எழுந்தருளினார்.

பின்பு வரும் 189-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பந்த பாசம் இல்லாதவரானாலும் இந்தப் பூமண்டலத்தின்மேல் தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்த ஆவல் சங்கரனாகிய அரத்துறை நாதனை வணங்குவதற்காக உள்ள பான்மை யினால் தேஜஸ் மிகுதியாக வீசும் அழகிய திருவடிவத்தைப் பெற்றவராக அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஈசனாகிய அரத்துறை நாதனைப் பலமுறை வணங்கிக் கொண்டே எழுந்தருளினார். பாடல் வருமாறு:

பாசம் மற்றில ராயினும் பார்மிசை ஆசை சங்கரற் காயின தன்மையால் தேசு மிக்க திருவுரு வானவர் ஈசனைத்தொழு தேதொழு தேகினார்.'

பாசம்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் .பந்தபாசம், மற்று:அசைநிலை. இலர்-இல்லாதவர்: இடைக்