பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 313

குறை. ஆயினும்-ஆனாலும். பார்மிசை-இந்தப் பூமண்டலத் தின்மேல். ஆசைதம்முடைய திருவுள்ளத்தில் எழுந்த ஆவல். .சங்கர ற்கு-சங்கரனாகிய அரத்துறை நாதனை வணங்கு வதற்காக. சங்கரன்-சுகத்தைக் செய்பவன். ஆயின.அமைந் துள்ள தன்மையால்-பான்மையினால், தேசு-தேஜஸ், ஒளிஅமிக்க-மிகுதியாக வீசும். திருவுரு ஆனவர்-அழகிய வடிவத் தைப் பெற்றவரான அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். ஈசனை-பரமேசுவரான கிய அரத்துறை நாதனை. த:சந்தி. தொழுதே தொழுது-பலமுறைகள் வணங்கிக் கொண்டே. ஏகினார்-எழுந்தருளினார். -

பின்பு வரும் 190-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'இந்தப் பெரிய உலகத்தில் உள்ள அறியாமையாகிய இருட்டுப் போகுமாறு சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய வைதிகமாமணியாக விளங்கியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருவுள்ளததிற்கு நிறைந்த அமுதத்தைப் போன்றவரும், சிவப்பாக இருக்கும் சடா பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவரும், தம்முடைய தந்தையாரைப் போன்றவருமாகிய பிரமபுரீ சருடைய வெற்றிக்கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து புறப்பட்டு எழுந்தருளினார். பாடல் வருமாறு:

இந்த மாநிலத் தின் இருள் நீங்கிட வங்த வைதிக மாமணி யானவர் சிகதை ஆரமு தாகிய செஞ்சடைத் தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந் தேகினார்."

இந்தமா-இத்தப் பெரிய நிலத்தின்-உலகத்தில் வாழும் மக்களிடத்தில் உள்ள இட ஆகுபெயர். இருள்-அறியாமை யாகிய இருட்டு. நீங்கிட-போகுமாறு. வந்த-சீகாழியில் திருவவதாரம் செ ய் த ரு ளி ய. வைதிக-வைதிக சமயத் தினுடைய. மா-பெருமையைப் பெற்று விளங்கும். மணி