பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔罗Q பெரிய புராண விளக்கம்-10

யானவர்-மாணிக்கத்தைப் போன்றவராகிய திருஞான சம். பந்த மூர்த்தி நாயனார். சிந்தை-தம்முடைய திருவுள்ளத் திற்கு. ஆர்-நிறைந்த அமுதாகிய-அமிர்தத்தைத் போன்ற வராகிய, உவம ஆகுபெயர். செம்-சிவப்பாக விளங்கும். சடை-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற்பெற்ற. த்:சந்தி. தந்தையார்-தம்முடைய தந்தையாரைப் போன்ற வராகிய பிரமபுரீசருடைய உவம ஆகுபெயர். கழல். வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை; ஆகுபெயர். தாழ்ந்து-தரையில் விழுந்து வணங்கி விட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. ஏகினார்.சீகாழியிலிருந்து புறப்பட்டு அப்பால் எழுந்: தருளினார்.

பிறகு வரும் 191-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:.

"மாறன்பாடி என்னும் பெயரைப் பெற்ற சிவத்தலம் வந்து சேர வழியில் நடந்து போன வருத்தத்தோடு தளர்ச்சி யினால் வேறாக நடந்து போகும் மக்கள் வெப்பத்தை அடைய ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் ஏறியிருக்கும் ந, ம,சிவா,ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை ஓதி அந்த மாறன்பாடியை அடைய." பாடல் வருமாறு:

மாறன் பாடி எனும்பதி வந்துற ஆறு செல்வருத் தத்தின் அசைவினால் வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார் ஏறும் அஞ்செழுத் தோதி.அங் கெய்திட." இந்தப் பாடல் குளகம். மாறன்பாடி எனும்மாறன்பாடி என்னும் பெயரைப் பெற்ற எனும்: இடைக்குறை. பதி-சிவத்தலம். வ ந் து உ ற - வழி யி ல் வந்து சேர. ஆறுசெல்-வழியில் கால்களால் நடந்து போன. வருத்தத்தின் வருத்தத்தோடு. அ ைச வி னா ல்-தளர்ச்சி யினால். வேறு-வேறாக. செல்பவர்-நடந்து போகும் மக்கள் :