பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராண்ம் 35

மக்களுக்குள்; ஒருமை பன்மை மயக்கம். எப்பெயரினோரும். எந்தப் பெயரை உடையவரும். அயல்-வேறு ஊர்களுக்கு: ஆகுபெயர். எய்தும்-போய் அடையும். இடை-இடையூறு: துன்பம். இன்றி-இல்லாமல், மெய்-சீகாழியில் வாழ்ந்து கொண்டு தங்களுடைய திருமேனிகளில்: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. படு-உண்டாகிய. மயிர்ப்புளகம்-புளகாங் கிதமாகிய மயிர்க்கூச்சை; மயிர்கள் சிலிர்த்தல். மேவி. அடைந்து. அறியாமே-தவறுகளை அறியாமலேயே, ஒப்புநிகர். இல்-இல்லாத கடைக்குறை. களி-ஆனந்தம். கூர்வது ஒர்-மிகுதியாக எழுவதாகிய ஒரு உவப்பு-மகிழ்ச்சி. உற-உண்டாகும்படி, உரைப்பார்-பின்வருமாறு வார்த்தை களைக் கூறுவார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

, பிறகு உள்ள 28-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்தச் சீகாழியில் வாழும் மக்கள், 'சிவபெருமான் வழங்கிய திருவருள் என்று கூறுமாறு பெருகி எழும் அடி யேங்களுடைய உள்ளங்கள் மகிழ்ச்சியை அடையும் பான்மை இந்தச் சீகாழியில் அடியேமுக்கு வருமாறு நடந்த நல்ல காரியம் என்ன?’ என்று கூறுவார்கள்: "அந்தணர்களுக்குள் கவுண்டின்ய கோத்திரத்தைப் பெற்ற குடும்பத்தில் ஒப்பற்ற ஒர் ஆண் குழந்தை திருவவதாரம் செய்தருளியிருக் கிறான்; அவன் இந்தச் சீகாழியில் திருவவதாரம் செய் தருளும் சகுனம் இது' என்று கூறி அந்த மக்கள் வியப்பை அடைந்தார்கள். பாடல் வருமாறு:

" சிவனருள் எனப்பெருகு சித்தமகிழ் தன்மை

இவனிது நமக்குவர எய்தியதென்?" என்பார்; கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் அவன்வரும் கிமித்தம் இது' என்றதி சயித்தார்." அந்தச் சீகாழியில் வாழும் மக்கள்,சிவன்-சிவபெருமான். அருள்-வழங்கிய திருவருள். என-என்று கூறுமாறு; இடைக் குறை. ப்: சந்தி. பெருகு-பெருகி எழும். சித்தம்-அடியேங் களுடைய உள்ளங்கள்: ஒருமை பன்மை மயக்கம். மகிழ்