பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - . பெரிய புராண விளக்கம்-10

மகிழ்ச்சியை அடையும். தன்மை-பான்மை. இவண்-இந்தச் இதர்ழியில், இது-இந்த நல்ல காரியம். நமக்கு-அடியே முக்கு வர-வருமாறு. எய்தியது-நடந்த நல்ல காரியம், என்-என்ன. என்பார்-என்று கூறுவார்கள் : ஒருமை பன்மை மயக்கம். கவுணியர்-அந்தணர்களுக்குள் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். குலத்தில்குடும்பத்தில் ஒரு-ஒப்பற்ற காதலன்-ஒர் ஆண் குழந்தை யாக விளங்குபவன். என்றது திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரை. உதித்தான்-திருவவதாரம் செய்தருளியிருக் கிறான். அவன்-அந்த ஆண் குழந்தையாகிய அவன. வரும்-இந்தச் சீகாழியில் திருவவதாரம் செய்தருளும். நிமித்தம் இது-சகுனம் இது. என்று - எனக் கூறி. அதி சயித்தார்.அந்த மக்கள் வியப்பை அடைந்தார்கள்; ஒருமை. பன்மை மயக்கம்.

அடுத்து உள்ள 29-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: அந்தச் சீகாழியில் உள்ள மலர்கள் அரும்புகள் மலர்ந்து நறுமணம் கமழும் பலவகையான மரங்கள் வளர்ந்து நிற்கும் பூஞ்சோலை உள்ள எல்லா இடங்களிலும் தேனோடு பொருந்திய மகரந்தப் பொடிகளோடு செறிந்த கிழக்கு, மேற்கு. வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென் கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தம் பொருந்திய ஒளி வெள்ளம் விரிய அதனால் புழுதியை அடங்கச் செய்து பெருமையைப் பெற்ற மலய மாகிய பொதியில் மலையிலிருந்து வந்து iசும் தென்றற் காற்றும் இந்த இடத்துக்கு வந்து அசையும். பாடல் வருமாறு:

பூமுகை அவிழ்ந்துமணம் மேவுபொழில் எங்கும் தேமருவு தாதொடு துதைந்ததிசை எல்லாம் தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி மாமலயமாருதமும் வந்தசையும் அன்றே.' பூ-அந்தச் சீகாழியில் உள்ள மலர்கள்; ஒருமை பன்மை, மயக்கம். முகை-அரும்புகள்: ஒருமை பன்மை மயக்கம்.