பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராண ம் 37

அவிழ்ந்து-மலர்ந்து. மணம்-நறுமணம். மேவு-க ம ழு ம். பொழில்-பலவகை மரங்கள் வளர்ந்து நிற்கும் பூஞ்சோலை உள்ள. அந்த மரங்களாவன : மா மரம், வாகை மரம், வேங்கை மரம், மகிழ மரம், பூவரச மரம், வேப்ப மரம்: நெல்லி மரம், நாவல் மரம், வில்வ மரம், நொச்சி மரம், துணா மரம், நெட்டிலிங்க மரம், அசோக மரம், விளா மரம் முதலியவை. எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். தே-தேனோடு. மருவுபொருந்திய. தாதொடு-மகரந்தப் பொடிகளோடு; ஒருமை பன்மை மயக்கம். துதைந்த-செறிந்த திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு. தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றிலும். துர - ப ரி சு த் த ம், மருவுபொருந்திய, சோதி-ஒளி வெள்ளம். விரிய-விரிய அதனால். த்:சந்தி. துகள்-புழுதியை. அடக்கி-அடங்கச் செய்து. மாபெருமையைப் பெற்ற, மலய-மலயமாகிய பொதியில் மலை யிலிருந்து. மாருதமும்-மந்த மாருதமாகிய தென்றற் காற்றும். வந்து-இந்த இடத்துக்கு வந்து, அசையும் அசைந்து வீசும். அன்று, ஏ : இரண்டும் ஈற்றசை நிலைகள்.

பிறகு வரும் 30-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

மேலே உள்ள தேவலோகத்தில் வாழும் தேவர்களும் விருப்பத்தோடு மறைத்தல் இல்லாத பூம்பொழிலில் வளர்ந்து நிற்கும் பலவகையான ம்ரங்களில் மலர்ந்திருக்கும் மலர்களைப் போல பெருமையைப் பெற்ற கற்பக மரத்தி விருந்து கொய்து கொண்டு வந்த மலர்களை மழையைப் போலப் பொழிந்து இந்தப் பூமண்டலத்தின் மேல் வந்து வளர்கின்ற சீகாழி மாநகரத்தில் விரும்பித் தங்களுடைய வாழ்க்கையை நடத்தும் நல்ல குணங்களைப் பெற்ற வேதியர்களோடு சேர்ந்து அந்தச் சிவபாத இருதயர் ஹோமம் ஆகிய மங்கல காரியத்தைப் புரிந்தார். பாடல் வருமாறு: