பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெரிய புராண விளக்கம்-10,

"மேலைஇமை யோர்களும் விருப்பொடு கரப்பில் சோலைமலர் போலமலர் மாமழை சொரிந்தே ஞாலமிசை வந்துவளர் காழிககள் மேவும் சீலமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.'

மேலை-மேலே உள்ள தேவலோகத்தில் வாழும். இமை யோர்களும்-தேவர்களும். விருப்பொடு-விரு ப் ப த் தோடு. கரப்பு-மறைத்தல். இல்-இல்லாத கடைக்குறை. சோலைபூம்பொழிலில் வளர்ந்து நிற்கும் பலவகையான மரங் களில் மலர்ந்திருக்கும். மலர் போல-மலர்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். மலர் மாமழை-பெருமையைப் பெற்ற கற்பக மரத்திலிருந்து கொய்து கொண்டு வந்த மலர்களை மழையைப் போல. மழை: உவம ஆகுபெயர். சொரிந்து-பொழிந்து. ஏ: அசைநிலை. ஞாலமிசை-இந்தப் பூ மண்டலத்தின் மேல். வந்து வளர்-வந்து வளரும். காழி நகர்-சீகாழி என்னும் பெரிய சிவத்தலத்தில். மேவும்விரும்பித் தங்களுடைய வாழ்க்கையை நடத்தும். சீல-நல்ல நணங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மறை யார்களுடன் - வேதியர்களோடு. ஓமவினை-சேர்ந்து ஹாமமாகிய மங்கல காரியத்தை. புத்திர காமேஷ்டி பாகத்தை' எனலும் ஆம். செய்தார்-சிவபாத இருதயர் புரிந்தார். -

பின்பு வரும் 31-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

'அந்தச் சீகாழி நகரத்தில் சிவபூத கணங்களினுடைய தலைவராகிய பிரமபுரீசர் இந்த உலகத்தில் வாழும் மக்கள் நல்ல வாழ்வைப் பெறுமாறு தம்முடைய திருவருளை வழங்கிய தலைவனாகிய பிரமபுரீசன் வழங்கிய திருவருளினு டைய பெருமையைப் பார்த்து நல்ல காரியங்களைப் புரிந்து தங்களுடைய வாழ்க்கையை நடத்துபவர்களாகிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு தேவங்களையும் கானம் செய்யும் வேதி யர்கள் வேறு ஒன்றைக் கூறினாலும் சிறிதேனும் குறையாத