பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 4I

விசும்பு ஆகாயத்தில் உள்ள மலினம்-அழுக்கு. கழியும். மழை பொழிவதால் போய் விடும். மாறா-மாறுபடாத. நயம்-இனிமையைப் பெற்ற ஒலியை. புள்-செம்போத்து, பருந்து, கருடன், கழுகு, காக்கை, தூக்கணாங் குருவி, மைனாக்குருவி, கிளி, சிட்டுக்குருவி, குருவி, அன்னப்பறவை, வாத்து, வண்டு முதலிய பறவைகள்: ஒருமை பன்மை மயக் கம்.ஒலிகள்-கூவும் சத்தங்களை.புரிவ-எழுப்புவனவாக விளங் கும். நல்ல-நல்லவையாகிய திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகள்: ஒருமை பன்மை மயக் கம். எல்லாம்-எல்லாவற்றிலும் அந்தப் பறவைகள் கூவும்

ஒலிகள் கேட்கும். -

பின்பு வரும் 33-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: * அழகிய இடங்களைப் பெற்ற சண்பையாகிய சீகாழி என்னும் அகலமான பழைய ஊரில் நடைபெறும் தேர்விழா, திருவாதிரை விழா, சித்திரா பெளர்ணமி விழா, விசாகப் பெருவிழா, ஆனி மகத் திரு விழா, ஆடிப் பெருக்கு விழா, ஆவண மூலத்திரு விழா, நவராத்திரி விழா, தீபாவளி விழா, தைப்பூசத் திருவிழா, பொங்கல் விழா, மாசிமக விழா, பங்குனி உத்தர விழா முதலிய திருவிழாக்களில் பெருகி முழங்கும் சங்க வாத்தியங்களும் படகம் என்னும் இசைக் கருவிகளும், தாரைகளும் முதலாக உள்ள வாத்தியங்கள். எல்லா இடங்களிலும் தங்களை வாசிப்பவர்கள் இல்லா மலும் முழங்கும் மங்களகரமான முழக்கமாகிய இனிய நாதமும் தெருக்களில் உள்ள எல்லா இடங்களிலும் மிகுதி யாகக் கேட்கும். பாடல் வருமாறு:

அங்கண்விழ விற்பெருகு சண்பை அகல் மூதூர்ச் சங்கபட கம்கருவி தாரைழுத லான எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.' அம்-அழகிய. கண்-இடங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். சண்பை-சண்பைய்ாகிய சீகாழி என்னும்.