பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெரிய புராண விளக்கம்-10

அகல்-அகலமாகிய, மூதூர்-பழைய ஊரில் நடைபெறும். ச் சந்தி,விழவில்-தேர்விழா,சித்திரா பெளர்ணமி விழா, விசாசப் பெருவிழா, ஆனி மகத்திரு விழா, ஆடிப்பூரத் திருவிழா, ஆடிப்பெருக்கு விழா, ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா, நவராத்திரி விழா, தீபாவளி விழா, திருவாதிரை விழா தைப்பொங்கல் விழா, தைப்பூசத் திரு விழா, மாசிமகத் திருவிழா, பங்குனி உத்தர விழா முதலிய திருவிழாக்களில்: ஒருமை பன்மை மயக்கம். பெருகு-பெருகி முழக்கும். சங்க சங்க வாத்தியங்கள்; ஒருமை பன்மை மயககம். படகம் கருவி-படகம் என்னும் இசைக் கருவிகள்: ஒருமை பன்மை மயக்கம். தாரை-தாரைகள்: ஒருமை பன்மை மயக்கம். முதலான-முதலாக உன்ள வாத்தியங்கள். அவையவான நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்சதாளம், முகவீணை, சல்லரி, வீணை, யாழ், தப்பட்டை, முரசு, பேரிகை, ஊது கொம்பு முதலியவை. எங்கணும்-எல்லா இடங்களிலும்: ஒருமை பன்மை மயக்கம். கணும்: இடைக்குறை இயற்: பவர்-வாசிப்பவர்கள்: ஒருமை பன்மை மயக்கம் இன்றியும். இல்லாமலும், இயம்பும்-தாங்களே முழங்கும். மறுகு-சீகாழி' யில் உள்ள தெருக்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம். எல்லாவற்றிலும். மங்கல-மங்கல வாத்தியங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். முழக்குஒலி-முழக்கமாகிய இனிய நாதமும். மலிந்த-மிகுதியாகக் கேட்கும்.

பின்பு உள்ள 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பெரியவையாக விளங்கும் உலகங்களில் இத்தகைய பான்மை அடைய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரைப் பெற்றெடுத்து வழங்கும் உயர் குலமாகிய வேதியர் களினுடைய சாதிக்குத் தலைவராகிய சிவபாத இருதயர் தம்முடைய திருமாளிகையினுடைய முற்றத்தில் பெருமை யையும் மகிழ்ச்சியையும் அதிசயத்தோடு தம்முடைய தலைவனாகிய பிரமபுரீசன் வழங்கிய திருவருளினால் பெறுவதற்கு அருமையாக விளங்கும் அழகிய ஒர் ஆண் குழந்தையை ஈன்று எடுக்கும் பொருட்டு அடைந்த அலங்: