பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 4$Y

காரங்களையும் புத்திரகாமேஷ்டி யாகத்தையும் அ ந் த வேதியர் புரிவாராயினார். பாடல் வருமாறு:

இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத் தரும்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில் பெரும்களி வியப்பொடு பிரான்அரு ளினாலே அரும் திரு மகப்பெற அணைந்த அணி செய்வார்.' இரும்-பெரியவையாக விளங்கும். பு:னம்-உலகங்களில்: ஒருமை பன்மை மயக்கம். இத்தகைமை-இத்தகைய பான்மை. எய்த-அடைய. அவர் தம்மை-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. தம்: அசைநிலை. த், சந்தி. தரும்பெற்றெடுத்து வழங்கும். குல-உயர்குலமாகிய, மறைவேதியர்களினுடைய திணை மயக்கம். த்:சந்தி. தலைவர்தலைவராகிய சிவபாத இருதயர். தம்-தம்முடைய.பவனம்தம்முடைய திருமாளிகைக்கு. முன்றில்-முன்னால் உள்ள முற்றத்தில். முன்றில்-இல் முன்; முன்பின்னாகத் தொக்க தொகை பெரும்-பெருமையையும். களி-மகிழ்ச்சியையும். வியப்பொடு-ஆச்சரியத்தோடு. பிரான்-தம்முடைய தலை வனாகிய பிரமபுரீசன்.பிரமபுரி-சீகாழி.அருளினால்-வழங்கிய திருவருளினால், ஏ:அசைநிலை. அரும்-பெறுவதற்கு அருமை யாக விளங்கும். திரு-அழகிய மக-ஒர் ஆண்குழந்தையை. ப்:சந்தி, பெற-ஈன்றெடுக்கும் பொருட்டு, ஆணைந்தஅடைந்து. அணி-அலங்காரங்களையும் புத்திரகாமேஷ்டி யாகத்தையும்; ஒருமை பன்மை மயக்கம். செய்வார்-அந்தச் சிவபாத இருதயர் புரிவாராயினார்.

அடுத்து உள்ள 35-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: 'அந்தச் சிவபாத இருதயர் விருப்பத்தைச் செய்யும் தம்முடைய திருவுள்ளம் மகிழ்ச்சியை அடையக் களிப்போடு சிறந்து விளங்குவார்; தம்முடைய திருமேனியின் மேலும் தலையின் மேலும் தடவிக் கொள்ளும் எண்ணெய் நீராட்டு விழாவோடு ஆனந்த சாகரத்தில் முழுகுவார்; எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு எண்ணெய்ப் பிசுக்குப் போகுமாறு: