பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~.44 பெரிய புராண விளக்கம்-10

அரைப்பையும் சீகைக்காயையும் தேய்த்துக் கொண்டு முழுகுவதாகிய செயல் நடைபெறும் மங்கல காரியத்தில்

உண்டாகும் ஒலி பொங்கி எழ சாதகத்தை எழுதுதலாகிய சடங்கையும் வேறு பல சடங்குகளையும் முறையாகப் புரிவார். பாடல் வருமாறு :

" காதல்புரி சிங்தைமகிழக்களி சிறப்பார்;

மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்; சூதகிகழ் மங்கல வினைத்துழனி மொங்கச் சாதகம் முறைப்பல சடங்குவினை செய்வார். '

காதல்-அந்தச் சிவபாத இருதயர் விருப்பத்தை. புரிசெய்யும். சிந்தை-தம்முடைய திருவுள்ளம்.மகிழ-மகிழ்ச்சியை அடைய. க்:சந்தி. களி-களிப்போடு. சிறப்பார்-சிறந்து விளங்கு வார். மீது-தம்முடைய தலையின் மேலும் திருமேனி முழுவதும். அசிையும்-தடவிக கொள்ளும். நெய்யனரி விழாவொடு-எண்ணெய் நீராட்டு விழாவோடு. திளைப்பார் -ஆனந்த சாகரத்தில் முழுகுவார் சூதம்-எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு எண்ணெய்ப் பிசுக்குப் போகுமாறு அரைப்பையும் கரைத்த சீகைக்காயையும் தேய்த்துக் கொண்டு முழுகுவதாகிய, நிகழ்-செயல் நடைபெறும். மங்கல வினை-மங்கல காரியத்தில். த்:சந்தி, துழனி-உண் டாகும் ஒலி. பொங்க-பொங்கி எழ, ச். சந்தி. சாதகம்சாதகத்தை எழுதுதல் ஆகிய சடங்கு-மங்கல காரி பத்தையும். முறை-முறைப்படி. ப்:சந்தி. பல சடங்கு-வேறு பல மங்கல காரியங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: புண்யா ஹவாசனம் செய்தல், ரrை இடுதல் முதலியவை. வினை-செயல்களை: ஒருமை பன்மை மயக்கம் செய்வார்-அந்தச் சிவபாத இருதயர் புரிவார்.

பின் வரும் 36-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'பெருமையைப் பெற்ற மேலான சாதியாகிய அந்தணர் சாதியில் பிறந்த மடப்பத்தைப் பெற்ற பெண்மணிகள் தமக்குள்ளே தாங்கள் அடையும் ஆனந்தத்தோடு தங்