பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 75,

உலகுய்ய ஞானம் உண்டார்.', 'ஞாலம் உய்ய வந்த பிள்ளையார்.”, 'தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந் தான்.', 'மாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய் வார்,' என்று சேக்கிழார் பாடியருளியவற்றைக் காண்க.

பின்பு வரும் 60-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அந்தச் சிவபாத இருதயர் சீகாழியில் உள்ள பிரம தீர்த் தத்தில் முழுகி விட்டுத் தருப்பணத்தைப் பிரிந்து நியமங்கள் பலவற்றைப் புரிவாராகித் தாம் சீராட்டும் தம்முடைய அழகிய புதல்வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மைப் பார்ப்பதற்கு முன்னால் அந்த நியமங்களைப் புரிந்த தற்குப் பிறகு குறையாத விருப்பத்தோடு அகமருட மந்தி

ாத்தை ஒதிப் படியுமாறு பிரமதீர்த்தத்தில் நிரம்பியுள்ள புனலில் வெளியில் வாராமல் பெருமையைப் பெற்று விளங் கும் பாதுகாப்பைப் பெற்றவராகி முழுகினார். பாடல்

வருமாறு:

நீராடித் தருப்பித்து கியமங்கள் பலசெய்வார் சீராடும் திருமனார் காண்பதன்முன் செய்ததற்பின் ஆராத விருப்பினால் அகமருடம் படியகீர் பேராது மூழ்கினார் பெருங்காவல் பெற்றாராய்.'

நீராடி-அந்தச் சிவபாத இருதயர் சீகாழி ஆலயத்துக்கு முன்பு உள்ள பிரமதீர்த்தத்தில் முழுகிவிட்டு. த்: சந்தி. தருப்பித்து-தம்முடை பிதிருக்கள் முதலியவர்களை எண் .ணித் தருப்பண்த்தைப் புரிந்து. நியமங்கள் பல-பல வரை பறையாகிய செயல்களை. அவையாவன சந்தியா வந்தனம் புரிதல், ஆடையை அணிந்து கொள்ளுதல் முதலியவை. செய்வார்-புரிவாராகி; முற்றெச்சம். சீராடும்-தாம் சீராட் டும். திரு-அழகிய மகனார்-தம்முடைய புதல்வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். காண்பதன் முன்தம்மைப் பார்ப்பதற்கு முன்னால், செய்ததற்பின்-அந்த நியமங்களைப் புரிந்ததற்குப் பிறகு. ஆராத-குறையாத. "திருப்தி அடையாத' எனலும் ஆம். விருப்பினால்-விருப்பத்