பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் . . 229

வான்மியூர் மருந்தை.', 'மாமலை மேல் மருந்தை., 'அஞ்சைக் களத்து நஞ்சுண்ட அமுதை.', 'மன்னு. திருநள்ளாற்று மருந்தை.”, 'மலைமேல் மருந்தை வணங்கினார்.', 'ஆருயிராய் அமிர்தாகி முத்தனாம்

முதல்வன்.” என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. -

அடுத்து வரும் 136-ஆம் செய்யுளின் கருதது வருமாறு:

'அவ்வாறு சிவகோசரியார் வந்து அந்த அழகிய காளத்தி மலையில் தேவர்களினுடைய தலைவராகிய காளத்தி நாதருடைய பக்கத்தில் தம்முடைய திருவுள்ளத்தில் நியமத்துடனும் போகின்ற அவர் காளத்தி நாதருடைய அழகிய சந்நிதியில் வேக வைத்த மாமிசத்தையும் எலும்பு களையும் பார்த்து அவற்றை விட்டு அகலுவதற்காக அவற்றை மிதித்துக் கொண்டு ஓடி, இந்தத் தகுதியல்லாத செயலை, ஐயோ! ஆர் புரிந்தார்?' என்று மனம் வருந்து வாரானார். பாடல் வருமாறு:

வந்துதிரு மலையின் கண் வானவர்கா யகர்மருங்கு சிந்தைகிய மத்தோடும் செல்கின்றார் திருமுன்பு வெந்த இறைச் சியும் எலும்பும் கண்டகல மிதித்தோடி

இந்தஅணு சிதம்கெட்டேன்! யார்செய்தார்?"

- • . என்றழிவார்." வந்து-அவ்வாறு சிவகோசரியார் வந்து. திரு-அழகிய.

மலையின்கண்-காளத்தி மலையில். வானவர் - தேவ லோகத்தில் வாழும் தேவ ர் க ளு ைட ய; ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-தலைவராகிய காளத்தி

நாதருக்கு. மருங்கு-பக்கத்தில். சிந்தை - தம்முடைய' திருவுள்ளத்தில். நியமத்தோடும்-நியமத்துடனும். செல் கின்றார்-போகிறவராகிய அந்த அந்தணர். திரு-அழகிய. முன்பு-காளத்தி நாதருடைய சந்நிதியில், வெந்த-வேக வைத்த இறைச்சியும்-மாமிசத்தையும். எலும்பும்-எலும்பு களையும்; ஒருமை பன்மை மயக்கம், கண்டு-பார்த்து.