பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பெரிய புராண விளக்கம்-4

அகல-அவற்றைவிட்டு அகலுவதற்காக. மிதித்து ஒடிஅவற்றை மிதித்துக்கொண்டு ஓடி. இந்த அனுசிதம்இந்தத் தகாத செயலை, கெட்டேன்-ஐயோ! யார்-ஆர். செய்தார்-புரிந்தார். என்று-என எண்ணி. அழிவார்-மனம் வருந்துவாரானார். - -

அடுத்து உள்ள 137-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

பக்கத்தில் வரவும், நேரில் வருவதற்குப் பயப்படாத வேடர் யாரோ இந்தத் தகாத செயலைச் செய்திருக் கிறார்: தேவர்களுக்கெல்லாம் முதல் தேவனும் பரமேசு வரனும் ஆகிய காளத்தி நாதனே, தேவரீருடைய அழகிய சந்நிதியில் இந்தக் காரியத்தைச் செய்து விட்டு அந்த வேடர் செல்கிறதா? இவ்வாறு நடக்கும் வண்ணம் தேவரீர் திருவுள்ளத்தில் கொள்வதா?' என்று சிவகோ சரியார் பதற்றத்தை அடைந்து அழுது தரையில் விழுந்து தம்முடைய திருவுள்ளம் சுழன்றார். பாடல் வருமாறு:

மேவநேர் வரஅஞ்சா வேடுவரே இதுசெய்தார்; தேவதே வேசனே, திருமுன்பே இதுசெய்து போவதே? இவ்வண்ணம் புகுதநீர் திருவுள்ளம் ஆவதே?’ எனப்பதறி அழுது விழுந் தலமந்தார் .'

மேவ-பக்கத்தில் வரவும். நேர்-நேரில். வர-வரவும். அஞ்சா-பயப்படாத, வேடுவரே-யாரோ ஒரு வேடர்தாம். இது-இந்தத் தகாத செயலை. செய்தார்-புரிந்திருக்கிறார். தேவ-தேவர்கள் யாவருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். தேவேசனே - முதல் தேவனும் பரமேசுவரனும் ஆகிய காளத்தி நாதனே. திரு-தேவரீருடைய அழகிய முன்புசந்நிதியில், ஏ: அசைநிலை. இது-இந்தச் செயலை. செய்துபுரிந்து விட்டு, போவதே-செல்வதா? இவ்வண்ணம்இவ்வாறு. புகுத-நடக்கும் வண்ணம். நீர்-தேவரீர். திருவுள்ளம்-திருவுள்ளத்தில். ஆவதே-கொள்வதா? எனஎன்று: இடைக்குறை. ப்: சந்தி. பதறி-பதற்றத்தை