பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 255

'யைப் பெற்ற. கங்கை-கங்கையாறு. முதல் - முதலாகிய. தீர்த்த-தீர்த்தங்களில்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பொரு-கரையை மோதும், புனலின்-நீரைக் காட்டிலும். எனக்கு அவன்-எனக்கு அந்தத் திண்ணன். வாய்-தன் வாயிலிருந்து. உமிழும் புனல்-உமிழும் நீர். புனிதம்துய்மையை உடையது.

கபிலர் என்னும் முனிவர் சினம் மூண்டு சகரர்களை மாளுமாறு செய்தார். அவர்களுடைய பரம்பரையில் வந்த பகீரதன் கங்கையாற்றை அவர்கள்மேற். பாயச் செய்தால் உய்வார்கள் என்று எண்ணினான். கபிலர் ‘'நீ பிரமதேவனை நோக்கித் தவம் புரிவாயாக’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். அவ்வாறே பரேதன் பதினாயிரம் ஆண்டுகள் பிரமதேவனைக் குறித்துத் தவம் புரிந்தான். பிரம தவன் தோன்றி, "உன்னுடைய தவத்தைக் கண்டு வியந்தோம். உன்னுடைய முன்னோர்கள் கபிலர் என்னும் முனிவர் சினம் மூண்டு சபித்ததனால் இறந்து போனார்கள். ஆகாயத்திலிருந்து கங்கையாறு அவர் களுடைய எலும்புகளின் மேல் பாய்ந்தால் அவர்கள் நல்ல .கதியை அடைவார்கள். ஆகாயத்திலிருந்து அந்தக் கங்கை யாறு மண்ணுலகத்துக்கு வந்தால் அதனுடைய வேகத்தை தாங்குவது சிவபெருமானுக்கல்லாமல் வேறு யாருக்கும் முடியாது. ஆகவே நீ சிவபெருமானை நோக்கித் தவத்தைப் புரிவாயாக’ என்றான்.

பகீரதன் அவ்வாறே சிவபெருமானை நோக்கிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தான். சிவபெருமான் தோன்றி, "நான் உன்னுடைய விருப்பத்தை நிறை வேற்றுவேன். கங்கையாறு வரட்டும்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு மறைந்தார். பகீரதன் கங்கை யாற்றை நோக்கி ஐயாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தான். கங்கையாறு ஒரு பெண்மணியினுடைய உருவத்தோடு தோன்றி, யான் பூமிக்கு வந்தால் என்னை யாரால் தாங்க முடியும?' என்று கூறி மறைந்து போனாள்.