பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 - - பெரிய புராண விளக்கம்:

மறுபடியும் பகீரதன் சிவபெருமானை எண்ணி இரண்டரையாயிரம் ஆண்டுகள் த வ ம் புரிந்தான். சிவபெருமான் எழுந்தருளி, உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்க, "கங்கை இவ்வாறு சொன்னாள்' என்று பகீரதன் இயம்ப, அஞ்சாதே. நான் அந்தக் கங்கையைச் சிறிதும் பிதிரவிடாமல் என்னுடைய சடாபாரத்தில் தாங்குவேன்' என்று அருளிச் செய்தார்.

பகீதரன் மீண்டும் கங்கையை நோக்கி இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தான். பிறகும் நீரையும், புழுதியையும், காற்றையும், சருகுகளையும், வெயிலையும் உண்டு, பிறகு அவற்றையும் உண்ணாமல் முப்பதினா யிரம் ஆண்டுகள் தவம் புரிந்தான். அப்போது கங்கை யாவரும் நடுங்கும்படி தோன்றினாள். அவளைச் சிவ பெருமான் தன்னுடைய சடை ஒன்றில் ஏற்றுக் கொண் டார். அவ்வாறு கங்கை அந்தச் சடையில் இருப் வதைக் கண்டு பகீரதன் திகைப்பை அடைந்து சிவபெரு மானை வணங்கினான். அந்தப் பெருமான் அவனுடைய கருத்தை அறிந்து, 'நீ வருந்தாதே' என்று அருளிக் -கங்கையைச் சிறிதளவு விடவே கங்கை பூமிக்கு இறங்கி வந்தாள். - - -

பகீரதன் கங்கைக்கு முன்னால் விரைவோடு செல்ல அந்தக் கங்கை சன்னு என்னும் முனிவருடைய வேள்வியை அழித்து விட்டாள். அதைக் கண்டு சினந்து அந்த முனிவர் கங்கையைத் தம்முடைய உள்ளங்கையில் எடுத்துக் குடித்து விட்டான். -

அதைப் பார்த்துப் பகீரதன் முன்னால் நடந்தவற்றை அேந்த முனிவரிடம் கூற, முனிவர், 'கொண்டு போவாயாக' என்று நவின்று தம்முடைய காதின் வழியாகக் கங்கையை விட்டான். கங்கை குதித்துக்கொண்டு சென்று சகரர் களுடைய எலும்புகளின்மேற் பாயவே, அவர்கள் நல்ல கதியை அடைந்தார்கள். இந்த வரலாற்றைக் கூறும்.

கம்பராமாயணப் பாடல்கள் வருமாறு: