பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் - 4?

மறம்-பாவச் செயலையே. பூண்டான்-தனக்கு ஆபரணத் . தைப் போலப் புனைந்து கொண்டிருந்த அதிசூரன். மூண்டான்-சென்று சேர்ந்தான்.

அடுத்து வரும் 37-ஆம் பாடலின் கருத்து வருமாறு: கொலை செய்தலை உடைய இடபத்தையும் ஆண் சிங்கத்தையும் போல வந்து எதிர்த்த அதிசூரனைக் கொலை புரியும் சந்தர்ப்பத்தை அறிந்துகொண்டு தம்முடைய திரு வடிகளைப் பெயர்த்து வைத்து நடக்கும் ஏனாதி நாத நாயனார் தம்முடைய பக்கத்தில் வந்த பகைவனாகிய அதி சூரன் தன்னுடைய நெற்றியை மறைத்துக் கொண்டிருந்த கேடகத்தை நெற்றியிலிருந்த வெளியே எடுக்க, இழிந்தவ -னாகிய அதிசூரனுடைய நெற்றியின்மேல் வெண்மையான விபூதியைத் தாம் பாாத்தார்.' பாடல் வருமாறு:

. அடல்விடையே றென்ன அடர்த்தவனைக்

. கொல்லும் இடை தெரிந்து தாள்பெயர்க்கும் ஏனாதி நாதர் புடிைபெயர்ந்த மாற்றான் பலகை புறம்போக்கக் கடையவன்தன் நெற்றியின்மேல் வெண்ணிறு

- தாம்கண்டார். ' அடல்-கொலை செய்தலைப் பெற்ற விடை-இடபத் தையும்; காளை மாட்டையும். ஏறு-ஆண் சிங்கத்தையும். என்ன-போல வந்து. அடர்த்தவனை-எதிர்த்த அதிசூரனை. க்: சந்தி. கொல்லும்-கொலை புரியும். இடை-சந்தர்ப்பத்தை. தெரிந்து-அறிந்து கொண்டு. தாள் தம்முடைய திருவடி களை ஒருமை பன்மை மயக்கம். பெயர்க்கும்-பெயர்த்து வைத்து நடக்கும். ஏனாதி நாதர்-ஏனாதி நாத நாயனார். புடை-தம்முடைய பக்கத்தில் பெயர்ந்த-தன்னுடைய கால் க்ளைப் ப்ெயர்த்து வைத்து நடந்து வந்த மாற்றான்.பகை வனாகிய அதிசூரன். பலகை:தன்னுடைய நெற்றியை மறைத்துக் கொண்டிருந்த கேடகத்தை. புறம்-நெற்றியி, லிருந்து வெளியில். போக்க-எடுக்க. க், சந்தி. கடையவன்தன்