பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணப்ப நாயனார் புராணம் 67

அருவரைக் குறவர் தங்கள் அகன்குடிச் சீறுார் ஆயம் பெருவிழா எடுத்து மிக்க பெருங்களி கூரும் காலை கருவரை காள மேகம் ஏந்திய தென்னத் தாதை பொருவரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக்

. கொண்டான். :

அரு-ஏறுவதற்கு அருமையான. வரைமலை அடிவாரத் தில் வாழும்; ஆகுபெயர். க் சந்தி. குறவர்தங்கள்-குறவர் களினுடைய. தம்: அசைநிலை. அகன்-விரிவான குடிகுடும்பங்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். ச் சந்தி, சீறுார்-சிறிய ஊர்களில்; ஒருமை பன்மை மயக்கம். ஆயம்அந்தக் குறவர்கள் கூடியுள்ள கூட்டம். பெரு-பெரிய விழாஇருவிழாவை. எடுத்து-கொண்டாடி. மிக்க-மிகுதியாக உள்ள பெரும்-பெரிய. களி-மகிழ்ச்சியை. கூரும்-மிகுதியாக அடையும். காலை - சமயத்தில். கரு-கருமையான. வரை. ஒரு மலையை. காள-கருமையான. மேகம்-ஒரு மேகம். ஏந்தியது-தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டது. என்ன-என்று கூறுமாறு. த் : சந்தி. தாதை-அந்த ஆண் குழந்தைக்குத் தந்தையாகிய நாகன். பொரு-போர் புரியும். வரை-மலைகளைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். த் : சந்தி. தோள்கள் - தன்னுடைய தோள்கள். ஆரதிருப்தியை அடையுமாறு, ப் சந்தி. புதல்வனை-தன்னு டைய மகனை. எடுத்துக் கொண்டான்-எடுத்துத் தழுவிக் கொண்டான். - -

அடுத்து வரும் 16-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

கருமையான் ஒளியைப் பரப்பும் திருமேனியைக் கொண்ட விருப்பம் மருவிய அந்த ஆண் குழந்தையும் கருமையான நிறத்தைப் பெற்ற புலிக்குட்டியைப் போல ஓங்கி வளர்ந்து வேடர்களுடைய அளவில் அல்லாமல் அருமையாகப் பெறுவதற்குரிய உலகத்தில் வாழும் மக்கள் எல்லோரும் அளப்பதற்கு அருமையான பெருமையைத் தோன்றச் செய்து, அதற்கு ஏற்றவையாக உண்டாகும் அடையாளங்கள் பலவற்றையும் பாராட்டிக் கூறும்