பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - பெரிய புராண விளக்கம்-4

பான்மையோடு விளங்கித் தோற்றப் பொலிவைக் கொள்ள.' பாடல் வருமாறு : -

கருங்கதிர் விரிக்கும் மேனிக் காமரு குழவி தானும் இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை

காட்டித். தரும்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து

தோன்ற.' இந்தப் பாடல் குளகம். கரும்-கருமையான கதிர்ஒளியை. விரிக்கும்-பரப்பும். மேனி-திருமேனியைக்கொண்ட. க்: சந்தி. காமரு-பலரும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்று விரும்பும் விருப்பம் மருவிய குழவிதானும்-அந்த ஆண் குழந்தையும். தான்: அசைநிலை. இரும்-கருமை: நிறத்தைப் பெற்ற. புலிப்பறழின்-புலிக்குட்டியைப் போல. ஓங்கி-ஓங்கி வளர்ந்து. இறவுளர்-வேடர்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம். அளவே-அளவிலே. அன்றி-அல்லா மல், அரும் பெறல்-அருமையாகப் பெறுவதற்குரிய. உலகம்இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள்: இடஆகுபெயர். எல்லாம்-எல்லாரும். அளப்பரும்-அளப்பதற்கு அருமை யாகிய, பெருமை-பெருமையை. காட்டி-தோன்றச் செய்து. த்: சந்தி. தரும்-உண்டாகும். குறி-அந்தப் பெருமைக்கு. ஏற்றவையாகிய அடையாளங்கள்; ஒருமை பன்மை, மயக்கம். பலவும்-பலவற்றையும். சாற்றும்-பாராட்டிக் கூறும். தன்மையில்-பான்மையோடு: உருபு மயக்கம். ப்ொவிந்து - விளங்கி, தோன்ற-தோற்றப் பொலிவைக் கொள்ள.

பிறகு உள்ள 17-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த ஆண் குழந்தையாகிய பெருமையைப் பெற்ற வனைத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்வதற்கு அருமையாக இருந்தமையால், 'இவனுக்கு உரிமையாகிய திருநாமமும் திண்ணன் என்று இனிமெல் சொல்லுங்கள்.'"