பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 9 |

அடுத்து வரும் 3-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'குறிஞ்சி நிவத்தில் வளர்ந்து நிற்கும் மூங்கில் மரத்தில் தோன்றிய முத்துக்களோடு முல்லை நிலமாகிய காட்டில் வளர்ந்து நிற்கும் பலவகையாகிய மரங்களில் மலர்ந்திருக்கும் புதியமலர்களோடும் தொகுதிகள் கணக்கு இல்லாத அலைகள் சுமந்து கொண்டு வந்து தன்னுடைய கரைகளினுடைய பக்கங்களில் பெரியவையாக விளங்கும் எருமைகளைப் பூட்டி

யிருக்கும் வயல்களை உழும் ஏர்களினுடைய கூட்டத்தைப் பெற்ற வயல்களை உழும் பண்ணைகளில் எறிந்து உலாவி எய்த உலகங்களிலும் வாழ்பவர்கள் தன்னுடைய அழகை எண்ணிப் பார்க்கும் வண்ணம் ஒ

வரும் பெருமையைப் பெற்ற பெண்ணையாறு பாய்கின்ற வளம் அந்தத் திரு முனைப்பாடி நாட்டில் பெருகியிருக்கும். பாடல் வருமாறு: - புனப்பண்ணை மணியினொடும்

புறவின்றும் புதுமலரும் கனப்பெண்ணில் திரைசுமந்து

கரைமருங்கு பெரும்பகட்டேர் இனப்பண்ணை உழும்பண்ணை எறிந்துலவி எவ்வுலகும் வனப்பெண்ண வரும்பெண்ணை

மாநதிபாய் வளம்பெருகும்.'

புன-குறிஞ்சி நிலத்தில் வளர்ந்து நிற்கும். ப்:சந்தி, பண்ணை-மூங்கில் மரத்தில் தோன்றிய, பணை என்பது பண்ணை என நின்றது; விரித்தல் விகாரம். மணியினொடும்முத்துக்களோடும்; ஒருமை பன்மை மயக்கம். புறவில்-முல்லை நிலமாகிய காட்டில், நறும்-வளர்ந்து நிற்கும் பலவகையாகிய மரங்களில் மலர்ந்திருக்கும் நறுமணம் கமழும். அந்த மரங் களாவன: தேக்கு மரம், வாகை மரம், வேங்கை மரம், மருத மரம், கடம்ப மரம், விளா மரம், வேப்ப மரம், பூவரச மரம், நெல்லி மரம், வில்வ மரம், நாவல் மரம் முதலியவை.