பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரிய புராண விளக்கம்-ெ

புது-புதிய மலரும்-மலர்களையும்; ஒரு ைம ப ன் ைம மயக்கம். அந்த மலர்களாவன: செந்தாமரை மலர், வெண் டாமரை மலர், வெள்ளைச் செவ்வந்தி மலர், மஞ்சட் செவ்வந்தி மலர், அல்லி மலர், ஆம்பல் மலர், மல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், பூவரச மலர், நுணா மலர், விளா மலர், மகிழ மலர் , நீலோற்பல மலர், குமுத மலர், தும்பை மலர், தாழம்பூ, குருக்கத்தி மலர், பவள மல்லிகை. மலர், அசோக மலர், வேப்ப மலர் முதலியவை. கணப்புதொகுதிகள்; ஒருமை பன்மை மயக்கம். எண்-கணக்கு. இல் - இல்லாத கடைக்குறை. திரை-அலைகள்; ஒருமை பன்மை மயக்கம். சுமந்து-சுமந்து கொண்டு வந்து. கரை-இரண்டு கரைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-பக்கங் களில்; ஒருமை பன்மை மயக்கம். பெரும்-பெரியவையாக விளங்கும். பகட்டு-எருமை மாடுகளைப் பூட்டியிருக்கும். ஏர்வயலை உழும் ஏர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். இன-கூட்டத்தைப் பெற்ற, ப்:சந்தி. பண்ணை-பண்ணை களில்: ஒருமை பன்மை மயக்கம். உழும்-வயல்களை உழும். பண்ணை-பண்ணைகளில்; ஒரு ைம ப ன் ைம மயக்கம். எறிந்து உலவி-வீசிக் கொண்டு ஒடி. எவ்வுலகும்-எந்த உல கங்களில் வாழ்பவர்களும்; இட ஆகு பெயர். உலகு. ஒருமை பன்மை மயக்கம். வனப்பு-தன்னுடைய அழகை. எண்ணஎண்ணிப் பார்க்கும்வண்ணம். வரும்-ஒடிவரும், பெண்ணை மாநதி-பெருமையைப் பெற்ற தென் பெண்ணையாறு. பாய்-பாயும். வளம்-நீர்வளம். பெருகும்-அந்தத் திரு. முனைப்பாடி நாட்டில் பெருகியிருக்கும். 'புனப் பண்ணை மணியினொடும்-குறிஞ்சி நிலத்தில் உள்ள தொகுதியான இரத்தினங்களோடும் எனலும் ஆம். மணி ஒருமை பன்மை மயக்கம். அந்த இரத்தினங்களாவன: மாணிக்கம், கோமே. தகம், மரகதம், பவளம், முத்து, நீலமணி, வைடூரியம். பதுமராகம், புட்பராகம் என்பவை. “. . -

அடுத்து வரும் 4-ஆம் கவியின் கருத்து வருமாறு: