பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 11

'தென்பெண்ணை ஆற்றிலிருந்து பிரிந்து ஓடி வரும் கால்வாய்களில் எல்லாம் தகடுகளைப் போன்ற வரால் மீன்கள் துள்ளிக் கு திக்கும்; அந்தத் திருவாய்மூரில் உள்ள வயல்களில் வளர்ந்து நிற்கும் கரும்புச் செடிகளில் உள்ள சனுக்கள் எ ல் ல | வ ற் றி லி ரு ந் து ம் பொழிகின்ற தேனைக் காணலாம்; பக்கங்கள் எல்லாவற்றிலும் கதிர் களைக்கொண்ட நெற்பயிர்கள் வளர்ந்து நிற்கும்; அந்தப் பர விய நிலங்கள் எல்லாவற்றிலும் குவைகளைப் பெற்ற பாக்கு மரங்கள் ஓங்கி வளர்ந்து விளங்கும்; வயல்களை ஏரிகளால் உழுத சுவடுகள் எல்லாவற்றிலும் முத்துக்களினுடைய வரிசை ஒளியை வீசிக்கொண்டு விளங்கும்; அந்தத் திருவாய் மூரில் உள்ள தடாகங்கள் எல்லாவற்றிலும் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்திருக்கும்; ஆகாயத்தின் மேல் முழுவதும் திருவாய்மூரில் வாழும் பெண்மணிகள் நீராடிவிட்டுத் தங்க் ளுடைய கூந்தல்களை உலர்த்துவதற்காக நெருப்பால் இட்ட அகில மர்ங்களினுடைய கட்டைகளிலிருந்து எழுந்த புகை போய் அடையும்; அந்தத் திருவாய்மூரில் உள்ள திருத்தமாகக் கட்டப் பெற்ற திருமாளிகைகள் எல்லாவற்றிலும் வாழும் மக்கள் வரவேற்று உணவைப் படைக்கும் விருந்தினர்களைக் க்ாணலாம். பாடல் வருமாறு:

- கால்எல்லாம் தகட்டுவரால்:

கரும்பெல்லாம் கண்பொழிதேன்; பாலெல்லாம் கதிர்ச்சாலி;

பரப்பெல்லாம் குலைக்கமுகு, காலெல்லாம் தரளநிரை

தடமெல்லாம் செங்கழுநீர்; மேலெல்லாம் அகிற்றும்;

விருந்தெல்லாம் திருந்துமன்ை.' கால்-தென் பெண்ணை ஆற்றிலிருந்து பிரிந்து ஓடிவரும் கால்வாய்கள் ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லா