பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பொய புராண விளக்கம்-ே

தலங்கள் நிலைபெற்று விளங்கி நிரம்பியதாக இருப்பது திரு. முனைப்பாடி நாடு என்னும் வ ளப்பங்களைப் பெற்ற நாடு ஆகும். பாடல் வருமாறு:

தொன்மைமுறை வருமண்ணின்

துகளன்றித் துகள் இல்லா நன்மைநிலை ஒழுக்கத்து

நலம்சிறந்த குடிமல்கிச் சென்னிமதி புனையவளர்

மணிமாடச் செழும்பதிகள் மன்னிநிறைக் துளது திரு

முனைப்பாடி வளநாடு. ’’ - தொன்மை-பழமையாகிய காலம் முதல். முறை-முறுை யாக. வரு-வரும். மண்ணின்-மண்ணினுடைய, துகள்-புழுதி. அன்றி-அல்லாமல்.த்:சந்தி. துகள்-குற்றம். இல்லா-இல்லாத, "துகள்' என்னும் சொல் இரண்டு பொருள்களில் வந்தது. நன்மை-நல்ல தன்மை. நிலை-நிலை பெற்ற ஒழுக்கத்து. "நல்ல ஒழுக்கமாகிய, நலம்-நன்மையினால். சிறந்த-சிறப்பை அடைந்த குடி-குடும்பங்கள். ' குடி மக்கள்' எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். மல் கி-மிகுதியாக வளர்ந்து. ச்:சந்தி, சென்னி-தங்களுடைய மேல் தளங்க ளில்; ஒருமை. பன்மை மயக்கம். மதி-சந்திரன். புனைய-தவழுமாறு: உயர்ந்து நின்று. வளர்-வளரும். மணி-மாணிக்கங்களைப் பதித்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மாட-மாடங்கள் உயரமாக நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். செழும்-செல் வச் செழிப்பைப் பெற்று விளங்கும். பதிகள். சிவத்தலங்கள். மன்னி-நிலைபெற்று விளங்கி. நிறைந்து-நிரம்பியிருப்பதாக, வினையாலணையும் பெயர். உளது-இருப்பது; இடைக்குறை. திருமுனைப்பாடி-திருமுனைப்பாடி நாடு என்னும் வள-நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். நாடு-நாடு