பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம்

' எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்

டங்கே வந்தடை யாளம் அருளினார் தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனார் அதென் கொலோ என்று பாடிக் கொண்டு எழுந்தருளும் பொழுது அந்த நாய னாருக்குப் பின்னால் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும் எழுந்தருள, அந்த இரண்டு நாயன்மார்களும் சேர்ந்து கொண்டு சென்று தரிசித்த தலம் இது.

இதைப்பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய பாசுரம் ஒன்று வருமாறு:

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உண்ணின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே." அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு பாசுரம் வருமாறு: .

பாலின் மொழியாளோர் பாகம் கண்டேன்;

பதினெண்கணமும் பணியக் கண்டேன்; நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்;

நெற்றி துதல்கண்டேன்; பெற்றம் கண்டேன்; காலைக் கதிர்செய் மதியம் கண்டேன்; -

கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்; மாலைச் சடையும் முடியும் கண்டேன்;

வாய்மூர் அடிகளை நான் கண்ட வாறே." . பிறகு உள்ள 2-ஆம் பாடலின் கருத்து வருமாறு: -

பழங்காலம்முதல் முறையாக வரும் மண்ணினுடைய புழுதி அல்லாமல் வேறு துகள் இல்லாத நன்மை நிலை பெற்ற நல்ல ஒழுக்கமாகிய நன்மையினால் சிறப்பை அடைந்த குடும்பங்கள் மிகுதியாக வளர்ந்து தங்களுடைய மேல் தளங் களில் சந்திரன் தவழ வளரும் மாணிக்கங்களைப் பதித்திருக் கும் மாடங்கள் ஓங்கி நிற்கும் செழுமையைப் பெற்ற சிவத்