பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பெரிய புராண விளக்கம்-6

பெருங்ாமச் சீர்பரவ

லுறுகின்றேன்: பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய

ஒண்ணாமை உணராதேன்.' பேருலகில்-இந்தப் பெரிய பூ மண்டலத்தில். ஒரு நாவுக்கு-ஒரு நாக்கினால்; உருபு மயக்கம். உரை செய்யபாட. ஒண்ணாமை-முடியாத தன்மையை. உணராதேன்தெரிந்து கொள்ளாத அடியேன். திருநாவுக்கரசு-திருநாவுக் கரசு நாயனாருடைய. வளர்-வளர்ந்து வரும். திருத்தொண் டின்-திருத் தொண்டுகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நெறி-வழி. வாழ-வாழுமாறு. வரு-திருவாய்மூர் என்னும் சிவத்தலத்தில் திருவவதாரம் செய்தருளி வரும். ஞான-சிவ ஞானத்தையும். த்:சந்தி. தவ-தவத்தையும். முனிவர்-பெற்ற வராகிய அந்த முனிவராகிய, வாகீசர்-வாகீசருடைய. வாகீசர்-வாக்குக்குத் தலைவர். வாய்மை-உண்மை. திகழ்விளங்கும். பெரு-பெருமையைப் பெற்ற, நாம-திருநாமத் - தினுடைய ச்:சந்தி. சீர்-சீர்த்தியை. பரவல் உறுகின்றேன். புகழ்ந்து பாடத் தொடங்குகிறேன். இந்தப் பாடலில் விற் பூட்டுப் பொருள்கோள் அமைந்திருக்கிறது.

திருவாய்மூர்: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்ப்வர் வாய்மூர் நாதேசுவரர். அம்பிகை பாலினும் நன்மொழி அம்மை. இது திருவாரூருக்குத் தென் கிழக்குத் திசையில் 15 மைல் தூரத்தில் உள்ளது. சப்த விடங்கத் தலங்களுள் இது ஒரு தலம். சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது. ஆலயம் கிழக்குத் திசையை நோக்கி இருப்பது. அதற்கு எதிரில் சூரியன் உண்டாக்கிய சூரிய தீர்த்தம் உள்ளது. திருநாவுக்கரசு நாயனார். வேதா ரணியத்தில் தங்கியிருந்த காலத்தில் வாய்மூர்நாதேசுவரர் அவர் முன் தோன்றியருளித் திருவாய்மூருக்கு வருமாறு கட்டளையிட்டருளினார். அந்த நாயனார்,