பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - பெரிய புராண விளக்கம்-6

பெற்றவளும் மருணிக்கியாருடைய தமக்கையாரும் ஆகிய திலகவதியார். அடி:ஒருமை பன்மை மயக்கம். திரு-அழகிய அலகும்-துடைப்பத்தையும். திரு-அழகிய மெழுக்கும்-ஆல யத்தின் தரையை மெழுகுவதற்கு உரிய சாணத்தையும். தோண்டியும்-அபிடேக நீரை நிரப்பிய ஒரு தோண்டியையும். கொண்டு-தம்முடைய கைகளில் எடுத்துக் கொண்டு. ஆறுகங்கையாற்றை. அணிந்தார்-தம்முடைய தலைமேல் தங்க வைத்தவராகிய வீரட்டானேசுவரர். கோயிலினுள்-எழுந் தருளியிருக்கும் ஆலயத்துக்குள். அடைந்து-தாம் புகுந்து. அவரை-அந்த மருணிக்கியாரை. க்:சந்தி. கொடு-தம்மோடு கூட்டிக் கொண்டு. புக்கார்-வீரட்டானேசுவரருடைய ஆலயத்துக்குள் நுழைந்தார். -

பிறகு வரும் 69-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'அலைகளை வீசும் கெடில நதிக்கரையின் மேல் விளங் ஆகும் திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருந்த சிவந்த இ.பொன்மலையாகிய மேருமலை என்னும் வில்லை ஏந்திய வராகிய வீரட்டானேசுவரருடைய பெருமையைப் பெற்ற ஆலயத்தில் அந்த ஈசுவரரை வணங்கி விட்டு அந்தத் திருக் கோயிலை வலமாக வந்து மீண்டும் அந்த ஈசுவரரைப் பணிந்து தரையின் மேல் விழுந்து வணங்கித் தம்முடைய தலைவனா சிய விரட்டானேசுவரன் வழங்கிய திருவருளால் அந்த மருணிக்கியார் இனிய சுவையைப் பெற்ற வார்த்தைகளைக் கொண்ட செந்தமிழ் மாலைகளாகிய திருப்பதிகங்களை

அந்த வீரட்டானேசுவரருக்கு அணியும் உணர்ச்சி உண்டாக அந்த ஈசுவரருடைய பெருமைகளை அறிந்து பாடுவாரா னார். பாடல் வருமாறு: -

திரைக் கெடில வீரட்டா

னத்திருந்த செங்கணக வரைச்சிலையார் பெருங் கோயில்

தொழுது வலம் கொண்டிறைஞ்சித்