பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 117

தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து

தம்பிரான் திருவருளால் உரைத்தமிழ்மா லைகள்சாத்தும்

உணர்வுபெற உணர்ந்து ரைப்பார்.'

திரை-அலைகளை வீசும்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கெடில-கெடில நதியின் கரையின் மேல் விளங்கும்: ஆகு பெயர். வீரட்டானத்து-திருவதிகை வீரட்டானத்தில், இருந்த-எழுந்தருளியிருந்த, செம்-சிவப்பாக விளங்கும். ககைவரை-பொன்மலையாகிய மேருமலை என்னும். ச்:சந்தி. சிலையார்-வில்லைஏந்தியவராகிய வீரட்டானேசுவரருடைய. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். கோயில்-ஆலயத் தில். தொழுது-மருணிக்கியார் அந்த ஈசுவரரை வணங்கி. வலம் கொண்டு-அந்தத் திருக் கோயிலை வலமாக வந்து. இறைஞ்சி-மீண்டும் அந்த ஈசுவரரைப் பணிந்து. த்:சந்தி. தரைத் தலத்தின் மிசை-தரையாகிய இடத்தின் மேல். வீழ்ந்து-வணங்கி, தம்-தம்முடைய, பிரான்-தலைவனாகிய அந்த வீரட்டானேசுவரன். திருவருளால்-வழங்கிய திருவரு வினால். உரை-இனிய சுவையைப் பெற்ற வார்த்தைகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம், த்:சந்தி. தமிழ் மாலை கள்-செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய திருப் பதிகங்களை.சாத்தும்-அந்தவிரட்டானேசுவரருக்கு அணியும். உணர்வு-உணர்ச்சியை பெற-பெற்று உண்டாக, உணர்ந்துஅந்த ஈசுவரருடைய பெருமைகள்ை அறிந்து. உரைப்பார். பாடியருள்வாரானார். - . - r

அடுத்து வரும் 70-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

விபூதியை நிறையப் பூசிக் கொண்ட திருமேனியோடு நிறைந்த பத்தியைப் பெற்ற தம்முடைய திருவுள்ளத்தில் பக்தி மிகுதியாக உண்டாக அந்த மருணிக்கியார் பகைவர் களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய திரிபுரங்களாகிய மூன்று பறக்கும். தி-8 . - ** . . . . .” -