பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 125

வழியை. அறியாது.தெரிந்து கொள்ளாமல். மயங்கி-மயக் கத்தை அடைந்து. அவம்-வீணான செயல்களை ஒருமை பன்மை மயக்கம். புரிவேன்-செய்பவனாகிய அடியேன்: என்றது மருணிக்கியார் தம்மைக் கூறிக் கொண்டது. மைமையைப் போலக் கருமையானதும்; வினையாலணையும் பெயர். வாசநறும்-வாசனை கமழும்; நறுமணம் கமழும். குழல்-கூந்தலைப் பெற்ற, மா.பெருமையைக் கொண்ட மலையாள்-இமாசல அரசனுடைய புதல்வியாகிய பார்வதி தேவியினுடைய. மலை திணை மயக்கம். மணவாளன்-கணவ. னாகிய கைலாசபதியினுடைய. பார்வகி தேவியினுடைய கூந்தல் இயற்கையாகவே நறுமணம் கமழ்வது. இது நக்கீரர் வர லாற்றால் அறியலாகும். மலர்-செந்தாமரை மலர்களைப் போன்றவையும்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கழல்வெற்றிக் கழலைப் பூண்டவையும் ஆகிய திருவடிகளினிடத் தில்: ஆகுபெயர். வந்து-அடியேன் வந்து. அடையும்சேரும். இவ்வாழ்வு-இந்த நல்ல வாழ்வை. பெற-அடியேன் பெறும் பாக்கியத்தை. த்:சந்தி,தரு-வழங்கிய. சூலையினுக்கு. இந்தச் சூலை நோய்க்கு. எதிர்-அடியேன் கைம்மாறாக. செய்-புரியும். குறை-செயல். என்கொல்-என்ன இருக்கிறது. கொல்: அசைநிலை. என-என்று எண்ணி; இடைக்குறை. த்:சந்தி. தொழுவார்-அந்த வீரட்டானேசுவரரை அந்த மருணிக்கியார் வணங்குபவரானார்.

விபீடணன் இராவணனால் துரத்தப்பட்டு இராம பிரானிடம் அடைக்கலம் புகுந்தபோது அவன் கூறியதாக உள்ள பாடல் இங்கே ஒப்பு நோக்குவதற்கு உரியது. * மின்மினி ஒளியின் மாயும்

பிறவியை வேரின் வாங்கச் செம்மணிமகுடம் நீக்கித்

திருவடி புனைந்த செல்வன் தன்முனார் கமலத் தண்ணல் தானித்யாா சரணம் திாழ