பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玄125 பெரிய புராண விளக்கம்-5

என்முனார் எனக்குச் செய்த

உதவிஎன் றேம்ப லுற்றான்.”

(விபீடணன் அடைக்கலப் படலம், 138.) பிறகு உள்ள 74-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'மருணிக்கியார் வீரட்டானேசுவரரை அடைந்த இந்தச் சமயத்தில் நெடுங்காலமாக உள்ள கீர்த்தியைப் பெற்ற திரு ..வ திகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருந்த தலைவனாகிய வீரட்டானேசுவரன் வழங்கிய திருவருளால். பாவுற்றவர்' என்று தொடங்கும் செந்தமிழ் மொழியில் அமைந்த இனிய சுவையைப் பெற்ற சொற்களைக் கொண்ட வளப்பத்தை உடைய ஒரு திருப்பதிகமாகிய மாலையை பாடியருளிய தன்மையினால் அந்த மருணிக்கியாருக்கு, திருநாவுக்கரசு நாயனார்' என ஏழு உலகங்களில் வாழும் மக்களிடத்தில் உன்னுடைய நல்ல திருநாமம் யாவரும் விருப்பத்தை அடை யும் வண்ணம் நிலை பெற்று விளங்குவதாகுக!” என எல்லா மக்களுக்கும் ஆச்சரியம் உண்டாகுமாறு மேகங்கள் தவழ்ந்து தங்கும் ஆகாயத்திலிருந்து ஒர் அசரீரி வாச்கு எழுந்து கேட்டது. பாடல் வருமாறு: -

மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்

வீரட்டம் அமர்ந்த பிரான்அருளால் பாவுற்றவர்'செந்தமிழின்சொல்வளப்

பதிகத்தொடை பாடிய பான்மையினால் நாவுக்கர சென்று கேழினும்கின்

நன்னாமம்கயப்புற மன்னுக' என்றி யாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா “, னிடையே ஒரு வாய்மை எழுந்ததுவே.” - மேவுற்ற-மருணிக்கியார் வீர ட் டா .ே ன சு வ ர ை ア அடைந்த இவ்வேலையில்-இந்தச் சமயத்தில். நீடியநெடுங்காலமாக உள்ள சீர்-சீர்த்தியைப் பெற்ற வீரட்டம். திருவதிகை வீரட்டானத்தில். அமர்ந்த-கோயில்கொண்டு எழுந்தருளியிருந்த பிரான்-தலைவனாகிய வீரட்டானேசு வரன். அருளால்-வழங்கிய திருவருளால். பாவுற்றவர்