பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - - பெரிய புராண விளக்கம்-6

பெற்ற வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய திருவுள்ளத்தோடும் உண்மையோடும் தம்முடைய திரு மேனிக்கு ஏற்ற திருப்பணிகளைப் புரிபவராகி விரவியிருக்கும் சைவ சமயத்துக்கு உரிய அடையாளங்களாகிய விபூதியைப். பூசிக் கொள்ளுதல், உருத்திராக்க மாலையை அணிந்து கொள்ளுதல், சடாபாரத்தைத் தரித்துக் கொள்ளுதல் என் பவை விளக்கமாகப் பொருந்த தம்முடைய திருவுள்ளத்தில் அடைந்து அமைந்த வீரட்டானேசுவரரைத் தியானம் புரிதல் அறாத உணர்ச்சியும், முடிவு இல்லாமல் எழுந்து பொங்கி வரும் அழகிய வாசகங்களாகிய திருப்பதிகங்களும், தம் முடைய திருக்கரத்தில் விளங்கும் உழவாரப் படையோடும் தாம் கைக் கொண்டு வேறு தொண்டர்களோடு சேர்ந்து கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் உருக்கத்தைப் பெற்று விளங்கினார். பாடல் வருமாறு: .

' மையற்றுறை ஏறி மகிழ்ந்தவர்சீர்

வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் மெய்யுற்ற திருப்பணி செய்பவராய்

விரவும்.சிவ சின்னம் விளங்கிடவே எய்துற்ற தியானம் அறாஉணர்வும் ஈறின்றி எழும்திரு வாசகமும் கையில்திக ழும்உழ வாரமுடன் *

கைக்கொண்டு கலந்து கசிந்தனரே." . மையல்-மயக்கத்தை உண்டாக்கும். துறை-சமண சமய மாகிய படுகுழியின் துறையின் மேல் ஏறி மகிழ்ந்தவர்-ஏறி. மகிழ்ச்சியை அடைந்தவராகிய, சீர்-சீர்த்தியைப் பெற்ற. வாகீசர்-வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார். மனத் தொடு-தம்முடைய திருவுள்ளத்தோடும். வாய்மையுடன். உண்மையோடும். மெய்-தம்முடைய திருமேனிக்கு. உற்றஏற்ற. திருப்பணி-திருப்பணிகளை; ஒருமை பன்மை மயக்கம். செய்பவராய்-புரிந்து வருபவராகி. விரவும்-தம்மிடம் விரவி யிருக்கும் பொருந்தியிருக்கும். சிவசின்ன்ம்-சைவசமயத்துக்கு