பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 1.33

உரிய அடையாளங்களாகிய விபூதியைத் திருமேனி முழுவ தும் பூசிக்கொள்ளுதல், உருத்திராக்க மாலையை அணிந்து, கொள்ளுதல், சடாபாரத்தைத் தரித்துக் கொள்ளுதல் என் 'பவை. சின்னம்:ஒருமை பன்மை மயக்கம். விளங்கிட-விளக்க மாகப் பொருந்த, ஏ:அசைநிலை. எ ய்துள்ள தம்முடைய திருவுள்ளத்தில் அடைந்து அமைந்த, தியானம்-விரட்டா னேசுவரரைத் தியானம் புரிதல். அறாஅறாத உணர்வும். உணர்ச்சியும். ஈறு-ஒரு முடிவு. இன்றி-இல்லாமல் எழும்தம்முடைய திருவாயிலிருந்து எழுந்து பொங்கி வரும். திரு. அழகிய வாசகமும்-வாய் மொழிகளாகிய திருப்பதிகங் களும்; ஒருமை பன்மை மயக்கம். கையில்-தம்முடைய வலத் திருக்கரத்தில். திகழும்,விளங்கும். உழவாரமுடன்-உழ வாரப் படையோடும். கைக்கொண்டு-தம்முடைய திருக் கரங்களில் எடுத்துக் கொண்டு. கை:ஒருமை பன்மை மயக் கம். கலந்து-வேறு தொண்டர்களோடு சேர்ந்து கொண்டு. கசிந்தனர்-தம்முடைய திருவுள்ளத்தில் உருக்கத்தைப்பெற்று விளங்கினார். : . . . . . .” பிறகு உள்ள 78-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'உண்மையாகிய திருப்பணிகளைப் புரிந்த விருப்பத்தி, னால் தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய ஒப்பற்ற, தலைவராகிய வீரட்டிானேசுவரருடைய வெற்றிக்கழலைப் ஆண்டு விளங்கும் திருவடிகளில் தம்முடைய விருப்பம் நிறைய வரங்களைப் பெறும் பாகியத்ை தக் கொண்டிருக் கும் அந்த இயல்பைப் பெற்ற சிவத்தலமாகிய திருவதிகை விரட்டானத்தில் உள்ள தம்முடைய திருமடத்தில் தங்கி, விருந்த தபஸ்வினியாரும், திருநாவுக்கரசு நாயனாருடைய தமக்கையாரும் ஆகிய திலகவதியார், 'பொய் வார்த்தை களைக் கூறும் சமண சமயத்தைச் சார்ந்த சமணர்களி. னுடைய கட்டை விட்டு விட்டருளி வெளியில் வந்தவராகிய திருநாவுக்கரசு நாயனாருக்கு முன்னால் செல்லும் பிணிப்பை

தி-9