பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134. பெரிய புராண விளக்கம்-.ே

விட்டுவிட்டு அந்த நாயனாருக்குத் தம்முடைய திருவருளை, வழங்கி ஒரு பொருளாக அடியேங்களுடைய திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளும் கருணையினுடைய ஆற்றலை இந்தத் திருவதிகை வீரட்டான்த்தில் வேறு யார் அடைந்தார்?’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு அந்தத் திலக வதியார் விரட்டானேசுவரரை வணங்கினார். பாடல் வருமாறு: :

"மெய்ம்மைப்பணி செய்த விருப்பதனால் விண்ணோர்தனி நாயக னார்கழலில் தம்மிச்சை நிரம்ப வரம்பெறும்அத் தன்மைப்பதி மேவிய தாபதியார் பொய்ம்மைச்சம யப்பிணி விட்டவர்முன் போதும்பினி விட்டரு ளிப்பொருளா எம்மைப்பணி கொள்கருணைத் திறமிங்கி

யார்பெற்றனர்?' என்ன இறைஞ்சினரே...' மெய்ம்மை-உண்மையாகிய, ப்:சந்தி. பணி-திருப், பணிகளை ஒருமை பன்மை மயக்கம், செய்த புரிந்த, விருப்பதனால்-விருப்பத்தினால். அது:பகுதிப் பொருள் விகுதி. விண்ணோர்.தேவலோகத்தில் வாழும் தேவர்களி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். தனி-ஒப்பற்ற. நாயக னார்-தலைவராகிய வீரட்டானேசுவரருடைய. கழவில்வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளில்: ஆகு. பெயர். தம்,தம்முடைய இச்சை-விருப்பம். நிர باندنا في நிறைந்திருக்குமாறு. வரம்-வரங்களை ஒருமை பன்மை மயக்கம். பெறும்-பெறும் பாக்கியத்தை அடைந்திருக்கும். அத்தன்மை-அந்த இயல்பைப் பெற்ற ப்:சந்தி, பதி-சிவத், தலமாகிய திருவதிகை வீரட்டானத்தில் உள்ள தம்முடைய. திருமடத்தில் இடஆகு பெயர். மேவிய-தங்கிக் கொண்டி. ருந்த தாபதியார்-தபஸ்வினியாரும் திருநாவுக்கரசு நாய, னாருடைய தமக்கையாரும் ஆகிய திலகவதி யார். பொய்ம்மை - பொய்யான வார்த்தைகளையே கூ مقة ست