பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 135

பான்மையைப் பெற்ற, ச்: சந்தி. சமய-சமண சமயத்தைச் சார்ந்த சமணர்களினுடைய; ஆகுபெயர். ப்:சந்தி. பிணிகட்டை, விட்டு அருளி-விட்டுவிட்டு வந்த அந்த நாயனா ருக்குத் தம்முடைய தி ரு வ ரு ைள வழங்கி. ப்:சந்தி. பொருளா-ஒரு பொருளாக மதித்து. எம்மை-அடியேங்க ளுடைய உருபு மயக்கம். என்றது. திலகவதியார் தம்ம்ை யும் தம்முடைய தம்பியாராகிய திருநாவுக்கரசு நாயனாரை - யும் சேர்த்துச் சொன்னது. ப்:சந்தி. பணி-திருப்பணிகளை; ஒருமை பன்மை மயக்கம். கொள்-ஏற்றுக் கொண்டருளும். கருணை-கருணையினுடைய. த், சந்தி. திறம். ஆற்றலை. இங்கு-இந்தத் திருவதிகை விரட்டானத்தில். இ:குற்றிய லிகரம். யார்-வேறுயார்; அடியேங்களைத் தவிர வேறு யார். பெற்றனர்-பெறும் பாக்கியத்தை அடைந்தார். என்னஎன்று திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. இறைஞ்சினர்அந்த த் திலகவதியார் வீரட்டானே சுவரரை வணங்கினார். ஏ. ஈற்றசை நிலை. . r

அடுத்து வரும் 79-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: இத்தகைய பான்மையில் இந்தத் திருநாவுக்கரசு நாய னார் சிவசமய வழியை அடைந்து நிலைபெற்று விளங்கும் பெருமையைப் பெற்ற rx திருவதிகை வீரட்டானே சுவரர் வழங்கிய திருவருளைப் பெற்றுக் கொண்டு தம்மைத் துன் புறுத்திய துன்பமாகிய சூலைநோயிலிருந்து அ. க ன் ந இயல்பைப் பல தடவைகளும் கூறப்படும் பழமையைப்பெற்ற பாடலிபுத்திரமாகிய திருப்பாதிரிப் புலியூர் என்னும் பெரிய சிவத்தலத்தில் தங்கியிருந்த பொலிவற்ற செயல்களையே செய்யும் சமணர்கள் கேள்வியுற்று அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் மீண்டும் சைவசமயத்தைச் சேர்ந்துவிட்ட அந்தச் செயலைச் சகிக்காதவர்களாகி. பாடல் வருமாறு: .

இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை எய்தி மன்னு பேரருள் பெற்றிடர் இங்கிய வண்ணம்