பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - - பெரிய புராண விளக்கம்-6

பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரிற்

புன்மை யேபுரி அமணர்தாம் கேட்டது

  • - பொறாராய். ’

இந்தப் பாடல் குளகம். இன்ன-இத்தகைய தன்மையில்பான்மையில். இவர்-இந்தத் திருநாவுக்கரசுநாயனார். சிவ

சைவ சமய, நெறியினை-வழியை எய்தி-சமண சமயத்தை

விட்டுவிட்டு அடைந்து. மன்னு-நிலைபெற்று விளங்கும்.

ப்ேரருள்-திருவதிகை வீரட்டானேசுவரர் வழங்கிய பெருமை

யைப் பெற்ற திருவருளை. பெற்று-பெற்றுக் கொண்டு

இடர்-தம்மைத் துன்புறுத்திய துன்பமாகிய சூலை நோயி,

விருந்து நீக்கிய- அகன்ற வண்ணம்.இயல்பை. பன்னு- ப்லதடவைகளும் புகழ்ந்து கூறப்படும். தொன்மையில்

பழமையை உடைய உருபு மயக்கம். பாடலிபுத்திர-பாடலி புத்திரமாகிய திருப்பாதிரிப்புலியூர் என்னும். நகரில்-பெரிய

சிவத் தலத்தில் தங்கிக் கொண்டிருந்த. புன்மையே-பொலி

வற்ற செயல்களையே: ஒருமை பன்மை மயக்கம். புரி-செய்து வரும். அமணர் தாம்-சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தாம்:அசைநிலை. கேட்டு-கேள்வியுற்று. அது-அவ்வாறு

திருநாவுக்கரசு நாயனார் சமண சமயத்தை விட்டுவிட்டு மீண்டும் சைவ சமயத்தைச் சேர்ந்துவிட்ட அந்தச் செயலை. - பொற்ாராய்-சகிக்காதவர்களாகி; ஒருமை பன்ம்ை மயக்கம்.

அடுத்து வரும் 80-ஆம். செய்யுளின் கருத்து வருமாறு: தருமசேனருக்கு அவருடைய வயிற்றில் உண்டாகி

யிருந்த அந்தத் தங்களா தடுப்பதற்கு அருமையாக இருக் கும் சூலைநோய் ஒரு சமணராலும் இந்தச் சமண் பாழியில்

போகாமையினால் அந்தத் தருமச்ேனர் தம்முடைய உயிர் பிழைப்பதற்காகத் திருவதிகை வீரட்டானத்திற்குச் சென்று

பெருகியுள்ள சைவ சமயத்தைச் சார்ந்தவராக மாறி மீண்டு

தங்களுடைய கட்டினை விட்டுவிட்டு உஜ்ஜீவனத்தை அடைந்தார். இதனால் பாம் சேர்ந்திருக்கும் நம்முடைய பெருமையைப் பெற்று விளங்கும் சமண சமயம் விழுந்து